Tuesday Jun 02, 2026

பனங்குடி விண்ணகரம் பெருமாள் கோயில், புதுக்கோட்டை

முகவரி

பனங்குடி விண்ணகரம் பெருமாள் கோயில், பனங்குடி, அன்னவாசல் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் – 622101.

இறைவன்

இறைவன்: பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி பூதேவி

அறிமுகம்

சித்தன்னவாசல் பக்கத்தில் பனங்குடி என்ற சிறு கிராமத்தில் விமானம் இல்லாத அருமையான ஏகதள கற்றளியான பணங்குடி விண்ணகரம் என்ற பெருமாள் கோவில் உள்ளது. உள்ளே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பெருமாள் காட்சி கொடுத்தார். எண்ணெய் காப்பு பார்த்து எத்தனை வருஷம் ஆச்சுன்னு தெரியாத நிலையில் பெருமாள் உள்ளார். எந்த வழிபாடும் நடைபெறவில்லை. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அருமையான கற்றளி கோவில். ஆனால் கோவில் பற்றி எந்த தகவலும் தொல்லியல் துறையால் வைக்கப்படவில்லை. மாறாக இந்த தொல்லியல் சின்னத்தை சிதைத்தால் சட்டப்படி குற்றம் என்ற பலகை மட்டுமே உள்ளது. இன்றளவும் கோவில் சிதைந்து கொண்டு தான் இருக்கிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பனங்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top