நெடுஞ்சேரி சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
நெடுஞ்சேரி சிவன்கோயில்
நெடுஞ்சேரி, நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610107.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
பேரளம் – காரைக்கால் சாலையில் உள்ள அம்பகரத்தூரின் தெற்கில் ஓடும் நூலாற்றினை தாண்டினால் உள்ளது இந்த நெடுஞ்சேரி. அம்பகரத்தூரில் இருந்து 3 கிமீ தூரம் இருக்கிறது. நெடுங்காலமாக இருக்கும் ஊர் என்ற பொருளில் நெடும்-சேரி, நெடுஞ்சேரி எனப்படுகிறது. பல காலமாக சாலை ஓரத்தில் ஓர் 5 அடி உயர சிவலிங்கம் இருந்துள்ளது. வேறோர் இடத்தில் ஒரு இரண்டு அடி உயர சிவலிங்கம் இருந்துள்ளது. கோயில் என்னவானது எங்கிருந்தது என்ற தகவல் உள்ளுர்காரர்களிடம் கூட இல்லை.
கோவை அரன் பணி அறக்கட்டளையினர், கிரேன் மூலம் லிங்கமூர்த்திகளை தூக்கி நிலைநிறுத்தி, 05.03.2023 அதற்கொரு நந்தியெம்பெருமான் முன்வைத்து திருமேனி அழகீஸ்வரர் என்று பெயர் சூட்டி வழிபாடு செய்தனர். அதற்கென பெரிய மேற்கூரையமைக்கும் பணியும் செய்தளிக்கப்பட்டுள்ளது. ஊர் மக்களும் தினசரி விளக்கேற்றல், மாதாந்திர விழாக்களையும் செய்து மகிழ்கின்றனர். ஆங்காங்கே லிங்கங்கள் இருக்கின்றனவே இவை அத்தனையும் வழிபட இயலுமா? ஏன் இத்தனை லிங்கமூர்த்திகள்? இப்படி நிலை நிறுத்தியதன் மூலம் நம் முன்னோர் சொல்வதென்ன?
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது.






காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெடுஞ்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி