Thursday Jan 02, 2025

பாங்காக் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், தாய்லாந்து

முகவரி :

பாங்காக் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், தாய்லாந்து

2, சி லோம் சாலை, சி லோம் துணை மாவட்டம்,

பாங்க்ராக் மாவட்டம், பாங்காக் 10500,

தாய்லாந்து

இறைவி:

ஸ்ரீ மகா மாரியம்மன்

அறிமுகம்:

                       தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப் பெற்றதாகும். உள்ளூர்வாசிகள் இதை வட் கீட் என்று அழைக்கின்றனர். இங்கு குடியேறிய தமிழர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இக்கோவிலைக் கட்டினார்கள். இக்கோவில் மாரியம்மனைச் சிறப்பு தெய்வமாகக் கொண்டு கட்டப் பெற்றது. பாங்காக்கில் உள்ள புத்த சமயம் சாராத வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் பிற இந்து தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. உள்ளூர்வாழ் தமிழர்களும், தாய்லாந்து மக்களும் விழாக்காலங்களின்போது வழிபட வருகிறார்கள். நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

புராண முக்கியத்துவம் :

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். இக்கோயில் உள்ளூர்வார்சிகளால் வட்ஹட்க் (உமா தேவி ஆலயம்) என அழைக்கின்றனர். ஆரம்ப காலத்தில் பாங்காக்கில் உள்ள மற்ற இந்துக் கோயில்களைப் போன்று சாதாரணமாக இருந்த இக்கோயி்லில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துத் தெய்வங்களின் சன்னதிகள் மற்றும் தினமும் நடைபெறும் 6 கால பூஜை உள்ளிட்ட காரணங்களால் இக்கோயில் மிகவும் புகழ்பெற துவங்கியது. இக்கோயிலில் அனைத்துத் இந்து திருவிழாக்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுட் வருகிறது.

பிற தெய்வங்கள்: இக்கோயிலின் முக்கிய தெய்வமாக மகா மாரியம்மன் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் பிரகாரத்தில் பார்வதி, துர்க்கை , காளி, கணேசர், கந்தகுமரன், கிருஷ்ணன், விஷ்ணு, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. அது மட்டுமின்றி ஒரு சிறிய சிவலிங்கமும், தனியே நவக்கிரக சன்னதியும் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.           

சிறப்பு அம்சங்கள்:

இக்கோயிலின் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களும், அதற்கு பூசப்பட்டுள்ள வண்ணங்களும் காண்போரை கவரும் விதமாக அமைந்துள்ளது. ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் தென்னிந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு சான்றாக திகழ்கிறது. ஆலயத்திற்குள் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்படுவதில்லை என்றாலும், ஆலயத்தில் மூலவராக மகா மாரியம்மனின் படமும் விற்பனை செய்யப்படுவதில்லை. இது பாங்காங்கில் வாழும் இந்தியர்கள் மற்றும் தாய்லாந்து நாட்டினர் மகா மாரியம்மன் மீது கொண்ட தீவிர பக்தியை பறைசாற்றுகிறது.

திருவிழாக்கள்:

செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் பாரம்பரிய தமிழ் நாட்காட்டியைப் பின்பற்றி நவராத்திரி போன்ற மத விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. துர்பாக்கியம் நிவர்த்தி செய்வதாக நம்பப்படும் இவ்விழா, பத்து நாட்கள் நடைபெறும், இறுதி நாளில், கோவில் முன் மஞ்சள் மலர் மாலைகள் மற்றும் மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டு, ஸ்ரீ மாரியம்மனின் திருவுருவம் எடுக்கப்படுகிறது..

காலம்

1879 ஆம் ஆண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சி லோம் சாலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

சி லோம் சாலை

அருகிலுள்ள விமான நிலையம்

கிரயோவா (CRA)

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top