Saturday Dec 28, 2024

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்காரகம் (காஞ்சிபுரம்)

முகவரி

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்காரகம் (காமாட்சி அம்மன் சன்னிதி தெரு, பெரியா, காஞ்சிபுரம், தமிழ்நாடு 631502

இறைவன்

இறைவன்: கருணாகரப்பெருமாள் இறைவி: பத்மணி நச்சியார்

அறிமுகம்

திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்காரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 53 வது திவ்ய தேசம் ஆகும். இத்தல இறைவனை கார்ஹ மகரிஷி தரிசனம் செய்துள்ளார். இத்தல இறைவனை ஆணவம் நீங்கும் பொருட்டு பிரார்த்தனை செய்வதுண்டு, பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம் ஆகும்.

புராண முக்கியத்துவம்

மகாபலி சக்ரவர்த்தி என்பவன் அசுர குலத்தை சேர்ந்தவன். இருந்தாலும் நல்லவன். தான தர்மங்களில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது. இதனால் அவனுக்கு மிகுந்த கர்வம் ஏற்பட்டது. நல்லவனுக்கு இந்த கர்வம் இருக்ககூடாது என்பதால், பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்கிறார். இதைக்கண்ட மகாபலி,””தாங்களோ குள்ளமானவர். உங்களது காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே என்றான். அவனது குல குருவான் சுக்கிராச்சாரியார், வந்திருப்பது பகவான் விஷ்ணு என்பதை அறிந்து அவன் செய்ய போகும் தானத்தை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் எல்லாம் வீணாகிவிடும் என்பதால் மூன்றடி நிலம் கொடுக்க சம்மதித்தான். பெருமான் தனது திருவடியால் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை பாதாளத்திலும் வைத்து மற்றொரு அடி நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை படித்த மகாபலி தலை குனிந்து, இதோ என் தலை. இந்த இடத்தை தவிர வேறு ஏதுமில்லை, என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி பாதாளத்திற்கு அனுப்பினார்.. பாதாளம் சென்ற மகாபலிக்கு, பெருமாளின் பாதம் பட்டு பாதாள லோகம் வந்து விட்டோமே, தன்னால் அவரது உலகளந்த காட்சியை காண முடியவில்லையே என வருந்தினான். எனவே பாதாள லோகத்திலேயே உலகளந்த கோலம் காட்ட வேண்டி பெருமாளை குறித்து, மகாபலி கடும் தவம் இருந்தான். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், அவனுக்கு இத்தலத்தில் உலகளந்த திருக்கோலத்தை காட்டினார். இவனோ பாதாள உலகத்தில் இருந்தான். எனவே அவனால் பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லை. எனவே மீண்டும் பெருமாளிடம் மன்றாடினான். பெருமாள் இவனுக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில் ஆதிசேஷனாக காட்சியளித்தார். இந்த இடமே தற்போது திருஊரகம் என அழைக்கப்படுகிறது. இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் உள்ளது.

நம்பிக்கைகள்

ஆணவம் நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் வழிபாடு செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, பாயாசம் படைத்து வழிபாடு செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

கார்ஹ மகரிஷி என்னும் முனிவர் இந்த பெருமாளை குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றார். அவர் பெயராலேயே இத்திவ்ய தேசம் “காரகம்’ எனப்பட்டது என்பர். அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுர மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 4 கோவில்கள் உள்ளது நான்குமே திவ்ய தேசத்தை சேர்ந்தவை என்பது மிகவும் சிறப்பான ஒன்று. அவை 1. திருஊரகம் 2. திருநீரகம் 3. திருக்காரகம் மற்றும் 4. திருக்கார்வானம். இது காஞ்சிக்குக் கிடைத்தப் பெருமை ஆகும். திருஊரகத்தைத் தவிர மற்ற மூன்றும் வேறு எங்கோ இருந்ததாகவும் பிறகு இங்குப் பிரதிஷ்டை செய்ததாகவும் செய்திகள் உண்டு. இத்தல இறைவன் மேற்கு நோக்கி உலகளந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஸாகர ஸ்ரீகர விமானம் எனப்படும். இத்தல இறைவனை ஆதிசேஷன், மகாபலிச் சக்கரவர்த்தி ஆகியோர் தரிசித்துள்ளனர்.

திருவிழாக்கள்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும்.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்காரகம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top