Sunday Dec 29, 2024

முத்துராசபுரம் ஆடவல்லபநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

முத்துராசபுரம் ஆடவல்லபநாதர் சிவன்கோயில்,

முத்துராசபுரம், திருக்குவளை வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம்

இறைவன்:

ஆடவல்லபநாதர்

இறைவி:

வண்டாடிஅம்பிகை

அறிமுகம்:

திருவாரூர் – கச்சனம் வந்து அதன் கிழக்கில் இரண்டு கிமி தூரம் சென்றால் முத்துராசபுரம். முத்தரையர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் பல மாற்றங்கள் கண்டு இன்று கிழக்கு நோக்கிய ஒரு சிறிய சிவாலயமாக உள்ளது அருகில் ஒரு பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. ஊரின் மத்தியில் பெரிய குளம் ஒன்றுள்ளது அதன் கரையில் இந்த இரு ஆலயங்களும் உள்ளன. இறைவன் ஆடவல்லபநாதர் இறைவி – வண்டாடிஅம்பிகை சித்தர்களில் வண்டாடி சித்தர்கள் எனும் மரபினர் உள்ளனர். இவர்கள் வேண்டுதலுக்கு இணங்க இறைவன் ஆடல் காட்சி கொடுத்ததால் ஆடவல்லபநாதர் எனவும், அம்பிகையை வணங்கி மகிழ்ந்ததால் அம்பிகை இங்கே வண்டாடி அம்பிகை என பெயர்கொண்டதாக ஒரு வரலாறு உண்டு.

இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், பெரிய அளவிலான லிங்க மூர்த்தியாக உள்ளார். கருவறை வாயிலில் வலம்புரி விநாயகரும், பாலமுருகனும் உள்ளார்கள். அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டு நின்ற கோலம் காட்டி அருள்பாலிக்கிறார். ஒரு முகப்பு மண்டபம் உள்ளது இதில் இறைவனை நோக்கிய பெரிய நந்தியும், தெற்கு நோக்கிய பெரிய அளவிலான சுப்ரமணியரும், அருகில் தக்ஷ்ணமூர்த்தியும், பழமையான புடைப்பு சிற்பமாக சண்டேசரும் மேற்கு நோக்கிய பைரவரும் உள்ளனர். கருவறை கோட்டங்கள் என எதுவும் இல்லை. ஒரு கால பூஜையில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் அருள்பாலித்து வருகிறார்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முத்துராசபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top