Sunday Jan 12, 2025

பெரிய தடாகம் அனுவாவி சுப்ரமணியர் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி :

பெரிய தடாகம் அனுவாவி சுப்ரமணியர் திருக்கோயில்,

பெரிய தடாகம், கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா,

கோவை மாவட்டம் – 641 108

மொபைல்: +91 94434 77295 / 98432 84842

இறைவன்:

அனுவாவி சுப்ரமணியர், அனுமான்

அறிமுகம்:

அனுவாவி சுப்ரமணியர் கோயில், இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவில் உள்ள கோயம்புத்தூர் நகருக்கு அருகிலுள்ள பெரிய தடாகம் கிராமத்தில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயிலாகும். கோயம்புத்தூரில் இருந்து ஆனைகட்டி செல்லும் வழியில் கோவையின் புறநகரில் பெரிய தடாகம் அருகே மருதமலை மலையின் வடக்குச் சரிவில் இக்கோயில் அமைந்துள்ளது. ஹனுமானுடன் தொடர்புடைய முருகன் கோயிலில் இதுவும் ஒன்று.

புராண முக்கியத்துவம் :

 1957ல் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பழமையான கோவில் முற்றிலும் அடித்து செல்லப்பட்டது. பின்னர், 1969ல் புதிய கோவில் கட்டப்பட்டது.

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை சுமந்து கொண்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்கு தாகம் ஏற்பட்டது. அவர் இம்மலையில் உள்ள முருகப்பெருமானை வேண்டினார். அனுமனின் வேண்டுதலுக்கு மனமிரங்கிய முருகன், தன் வேலால் ஒரு இடத்தில் குத்த, அந்த இடத்திலிருந்து தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அனுமான் தாகம் தீர்ந்தார். கந்தப் பெருமான் வழிபாடு ராமாயண காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு வால்மீகி ராமாயணம் எடுத்துக்காட்டு. ராமன் விட்ட அம்புகள் கந்தனின் வேல் போல் பிரகாசித்ததாக 2 இடங்களில் சொல்லப் பட்டுள்ளது. பெயர்க்காரணம்:ஹனு என்றால் ஆஞ்சநேயர். “வாவி’ என்றால் ஊற்று, நீர்நிலை என்று பொருள். அனுமனுக்காக தோன்றிய ஊற்றாதலால் இத்தலம் ஹனுவாவி என்று பெயர் பெற்று தற்போது அனுவாவி ஆகிவிட்டது. அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் “அனுமக்குமரன் மலை’ என்ற பெயரும் உண்டு.

நம்பிக்கைகள்:

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள். இதில் சூரிய உதயத்திற்கு முன் தொடர்ந்து சில நாட்கள் குளித்தால் மன நோய், தோல் நோய் அகலும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

       மைசூர் மன்னன் ஒருவன் இங்குள்ள ஊற்றை “காணாச்சுனை’ என பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளான். எந்த காலத்திலும் வற்றாத இந்த புனித நீர் பக்தர்களின் தாகம் தீர்க்கிறது. திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் சுவாமியின் சிரசில் பூ வைத்து, ஒரு செயலைத் துவங்கலாமா என பார்க்கும் பழக்கம் உள்ளது.

சுயம்புமூர்த்தியாக அருள்பாலித்த சுவாமியும், தல விருட்சமாக இருந்த 5 மாமரங்களும் கடந்த 1957ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் அடித்து செல்லப்பட்டது. அதன் பின் புதிய கோயில் அமைக்கப்பட்டு 1969ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. 500 படிக்கட்டுகள் ஏறினால் கோயிலை அடையலாம். மலைக்கோயிலுக்கு முன்பாக இடும்பன் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரவீபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னதி உள்ளது. சிவபெருமான் அருணாசலேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இங்குள்ள ஊற்று நீரின் ஆரம்பம் எங்குள்ளது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை. கோயில் அமைந்துள்ள பகுதிக்கு நேர் தென்புறத்தில் மருதமலை உள்ளது. மலைப்பகுதி வழியாக ஏறி இறங்கினால் மருதமலையை அடையலாம்.

திருவிழாக்கள்:

சூரசம்ஹாரம், கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரிய தடாகம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்பத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top