Friday Dec 27, 2024

பாலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தெய்வநாயக பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

பாலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தெய்வநாயக பெருமாள் கோயில், பாலூர், செங்கல்பட்டு மாவட்டம்- 603 101.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ தெய்வநாயக பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி

அறிமுகம்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பாலூர் கிராமம். செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் செங்கல்பட்டு அடுத்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் செல்லும் எல்லா பேருந்துகளும் இவ்வூர் வழியாக செல்லும். ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தெய்வநாயக பெருமாள் நின்ற கோலம்,
இந்த திருநாமத்தோடு தமிழகத்தில் இரண்டு கோயில்கள் தான் உள்ளன. மற்றொன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இந்த விவரம் அக்கோயிலில் உள்ள செப்பேட்டில் காணப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இடிந்துபோய் 1966லிருந்து ஓடு கொட்டகையில் இறைவன் வாசம் செய்து வந்தார். பிறகு ஊர் மக்களின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும்,நிதி உதவியோடும் ஊர் பெரியவர்களால் நான்கு ஆண்டுகளாக முயற்சித்து புதிய ஆலயம் அமைக்கப்பட்டு 29-11-2023 புதன்கிழமை அன்று மஹாசம்ப்ரோக்ஷணம்
(குடமுழுக்கு) நிறைவுற்று தினந்தோறும் வழிபாடு நடந்து கொண்டு வருகிறது.
திரு R.சச்சிதானந்தம் முதலியார் அவர்களின் பெரிய பொருட்செலவில் அமைக்கப்பட்ட கோவிலானது அவருடைய முன்னேற்பாட்டாலும் அவ்வூர் கிராம மக்களின் உதவியாலும் திரு.ஸ்ரீகாந்த் குருக்கள் அவர்களால் தினசரி பூஜைகளும், திருவோணத் திருமஞ்சனம் அலங்கார பூஜைகளும் தவறாமல் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ஏகாதசி மற்றும் உகந்த அலங்கார பூஜைகளும் தொடர்ந்து நடைபெற திட்டமிட்டுள்ளது. குடமுழுக்கு முடிந்த பின் கிராமவாசிகளும் வெளியூரில் இருந்து பக்தர்களும் வரத் தொடங்கியுள்ளனர். இன்னும் கோவிலின் பிரகாரம் சுற்றிவர தரை மற்றும் சுற்றுச்சுவர் எழுப்ப ஆலயக் குழுவும் கிராம மக்களும் திட்டமிட்டு வருகின்றனர்.

தொடர்புக்கு

ஸ்ரீகாந்த்( குருக்கள்)
+91 9442246265
அண்ணன் கந்தன்(பொருளாளர்)
+91 9952186620
அண்ணன் சச்சிதானந்தம் (அமைப்பாளர்)
+91 9894376697
கண்ணன் (உதவியாளர்)
+91 9962942220

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

4 thoughts on “பாலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தெய்வநாயக பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

  1. Very glad to be a member of association. I proudly say that I involved my self in constructing the old small building with my friends when I was a youth and now , the strong temple built with stones along with my cousin Sachidanand am. I am so happy.

Leave a Reply

Your email address will not be published.

Back to Top