Sunday Dec 22, 2024

அருள்மிகு உருத்திர கோடீஸ்வரர் திருக்கோயில், கடம்பை இளங்கோயில் (கீழக்கடம்பூர்)

முகவரி

அருள்மிகு உத்ராபதீஸ்வரர் திருக்கோவில் கீழக்கடம்பூர் மேலக்கடம்பூர் அஞ்சல் காட்டுமன்னார்குடி வட்டம் கடலூர்மாவட்டம் PIN – 608304

இறைவன்

இறைவன்: உத்ராபதீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி

அறிமுகம்

இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். அப்பர் காலத்தில் பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், சொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் எனப் பலவகையான கோயில்கள் இருந்தன என்று அவர்தம் (6-71-5) பொருப்பள்ளி வரைவில்லாப் என்ற பாடலால் அறிகிறோம். முற்றிலும் இடிந்த நிலையிலுள்ள இக்கோயிலைக் காணும்போது, முன்பொரு காலத்தில் சிற்பக் கலை ததும்ப மக்கள் மனதைக் கவர்ந்த திருக்கோயிலாக விளங்கியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

புராண முக்கியத்துவம்

உத்ராபதி கோயில் என்று மக்கள் இக்கோயிலை சொல்கிறார்கள். கோயிலைப் புதுப்பிக்கும்போது, நித்திய வழிபாடு தடையின்றி நடைபெறும் பொருட்டு மூர்த்தியை வேறொரு இடத்தில் எழுந்தருளச் செய்து அமைத்த கோயில் இளங்கோயில் எனப்படும். இடைக்கால வழிபாட்டுக்கென அமைத்த இந்தக் கோயிலைப் பாலாலயம் என்றும் வழங்குவர். இவையும் தேவார ஆசிரியர்களால் பாடப் பெற்றமையின் நிலையான தனிக் கோயிலாக இன்றும் விளங்குவதைக் காணலாம். (மீயச்சூர் இளங்கோயில், கடம்பூர் இளங்கோயில் என்பன இவ்வகையின.

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காட்டுமன்னார்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

காட்டுமன்னார்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top