Sunday Dec 22, 2024

அருள்மிகு கோபிநாத் பெருமாள் கோயில், பட்டீஸ்வரம்

முகவரி

அருள்மிகு கோபிநாத் பெருமாள் கோயில், பட்டீஸ்வரம், கும்பகோணம் தாலுகா தஞ்சாவூர் மாவட்டம்-612 703, தொலைபேசி:+91 435 244 5419

இறைவன்

இறைவன்: கோபிநாதப்பெருமாள் , இறைவி: ருக்மிணி ,சத்யபாமா.

அறிமுகம்

பழையாறை அல்லது பழையாறு சோழர்களின் 5 தலைநகரங்களின் ஒன்றாகும். சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கி இருந்த காலங்களில் வசித்த ஊரான பழையாறை பின்நாளில் சோழர்கள் தலை எடுத்தபின் அவர்களின் 2 வது தலைநகராக மாறியது. கும்பகோணத்திற்கு தென்மேற்கே பட்டீஸ்வரத்திற்கு அண்மையில் ஆமைந்த கோபிநாத விண்ணகரம் என்னும் ஸ்ரீ கோகிநாத திருக்கோயிலில் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரம் கொண்டு ஸ்ரீசத்யபாமா ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீகோபிநாத பெருமாளாக இருந்து, சேவை சாதித்து அருளுகின்றார். தென்னகதுவாரகை என்றும் கோவிந்த விண்ணகரம் என்றும் கோபிநாத விண்ணகரம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகுந்தத்தைப் போன்றே ஏழுதிருவாயில்களை உடையதாய் மிகப்பெரிய தேர்மண்டபம் பெற்றிருந்து சிறந்து விளங்கிய இச்க்ஷேத்திரம் காலப்பெருவள்ளத்தாலும் நம்முடைய அறியாமையாலும் முற்றிலும் சிதைந்து கற்குவியலாகி அவற்றில் பெரும்பான்மையும் காணாமல் போய்விட்டன. இக்கோயிலை கோனப்பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். வாயிற்கோபுரம் இடிபாடுற்ற நிலையிலும், கோயில் வளாகம் புல்பூண்டு முளைத்தும் தற்போது உரிய பராமரிப்பின்றி உள்ளது. ராஜராஜசோழன் தந்தை சுந்தரச்சோழன் காலத்திற்கு முந்தைய கோவில் இது. ராமாயண மகாபாரத கோவில். ஏழு கோபுரங்களுடன் மிக மிக அழகாக 21/2 ஏக்கர் நிலத்தில் இருந்த பெரிய கோயில் இது. இப்போது ஒரே ஒரு உள்நுழைவு கோபுரத்தில் இரண்டு அடுக்குகள் மட்டுமே மிஞ்சியுள்ளது. சன்னதிக்குள் செல்லமுடியாதபடி எங்கு பார்ததாலும் புற்கள் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதும் அசுத்தமாகக் காணப்படுகிறது.கோயிலின் திருச்சுற்றில் வெளியே இடிபாடுற்ற நிலையில் கோபுரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

பழைய கோவில் வாழைக் கொல்லையில் இருந்துள்ளது. அதன் நுழைவு கோபுரம் மட்டும் இப்போது இருப்பது சிதைந்தும் போய் உள்ளது. பழைய கோவிலும் தேர் மண்டபம் புதிய கோவிலுக்கு வடக்கு பக்கம் உள்ளது. இரண்டும் மண் குவியலாய் கிடக்கிறது. அதன் மேல் பசுமை போர்வை போர்த்தியது போல் காடு வளர்ந்து உள்ளது. திருக்குளம் போன இடம் தெரியவில்லை. ஐந்து கோபுரங்களை காணவே இல்லை. சுற்று சுவரும் காணாமல் போய்விட்டது. அழகிய தேரையும் (தேர் கொஞ்சம் கூட இல்லை.) தேர் ஓடும் வீதிகளை இக் கோவில் கொண்டு இருந்தது. இத்திருக் கோயிலில் இரட்டை ஆஞ்சநேயராக வடக்கு நோக்கியிருந்து பிரதான பிரார்த்தனை மூர்த்தியாக ஆஞ்சநேய சுவாமி அருள் பாலிக்கின்றார். இவர்கள் தற்போது கூரைக் கொட்டகையின் கீழ் எழுத்தருளியுள்ளனர். சோழர் காலத்தில் இங்கு அமைந்திருந்த கற்றளியை திருமலை தேவமகாராயன் கி.பி.15ஆம் நூற்றாண்டில் புதுப்பித்திருக்கவேண்டும். அவரது கல்வெட்டுக்களில் இக்கோயில் பற்றிய பல குறிப்புகள் காணப்பெறுகின்றன.கி.பி.1450இல் மல்லிகார்ஜுன தேவராயர் சாசனம் இவ்வூரை திருச்த்திமுற்றமான முடிகொண்ட சோழபுரத்தில் இருந்ததாகச் சொல்கிறது. பழையாறை மாநகரின் வடமேற்கே செம்மாந்து இருந்த இக்கோயிலின் பெரும்பகுதி காலத்தின் கோலத்தால் மறைந்துவிட்டாலும் இன்றும் பண்டைய எச்சங்களைக் காணலாம்.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் உள்ள கோடிதீர்த்தம் என்கிற கிணறு ராமரின் வில்லினால் உருவாக்கப்பட்டது என்கிறது தலபுராணம். ஸ்ரீமன் நாராயணன் இச்க்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணராகவும், அனுமனுக்கு ராமனாகவும் காட்சியளித்தார், பீமனுக்கு அனுமான் விஸ்வரூபம் காட்டி அருளியதும், அனுமனுக்கு ஸ்ரீமன் நாராயணனே எழுந்தருளி காட்சி கொடுத்து அருளியதும் இச்க்ஷேத்திரத்தின் மகிமையாகும். அர்ச்சுணன் கண்ணன் மேல் கொண்ட அதீத பக்தியால் ஸ்ரீ கிருஷ்ணராக காட்சி கொடுத்தார் . அனுமனுக்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவை ராமராக பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது அதனால் இங்கு தவம் இருக்க ஸ்ரீ மகாவிஷ்ணு இங்கே ஸ்ரீ ராமனாக காட்சி கொடுத்தார். தென்னகதுவாரகை என்றும் கோவிந்த விண்ணகரம் என்றும் கோபிநாத விண்ணகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

ஸ்ரீமன் நாராயணன் இச்க்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணராகவும், அனுமனுக்கு ராமனாகவும் காட்சியளித்தார், வீமனுக்கு அனுமான் விஸ்வரூபம் காட்டி அருளியதும், அனுமனுக்கு ஸ்ரீமன் நாராயணனே எழுந்தருளி காட்சி கொடுத்து அருளியதும் இச்க்ஷேத்திரத்தின் மகிமையாகும்.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பட்டீஸ்வரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top