Thursday Dec 26, 2024

மடத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தென்காசி

முகவரி :

மடத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

மடத்தூர்,

தென்காசி மாவட்டம் – 627814.

இறைவன்:

சுப்பிரமணிய சுவாமி

அறிமுகம்:

தென்காசி திருநெல்வேலி பேருந்து பயணத்தில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமச்சந்திர பட்டினம் கிராமத்தில் இறங்கி தெற்கே அரை கிலோமீட்டர் தூரம் வந்தால் மடத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை அடையலாம். குற்றாலத்திலிருந்து மத்தளம்பாறை புல்லுக்காட்டுவலசை வழியாக 5 கிலோமீட்டர் பயணித்து வந்தால் இக்கோயிலை அடையலாம்.

புராண முக்கியத்துவம் :

 தமிழகத்தின் தென் பகுதியை பாண்டிய மன்னர்கள் ஆண்டபோது இந்த பகுதியை ஆட்சி செய்த மன்னன் ஒருவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே பெரியோர்களின் ஆலோசனைப்படி ஏழு ஊர்களில் மடங்கள் கட்டினான். அவன் பிள்ளை வரம் வேண்டி கட்டிய ஏழாவது மடம் இந்த ஊரில் அமையப் பெற்றதால் பிள்ளை மடத்தூர் என்று பெயர் விளங்கியது. அதுவே காலப்போக்கில் மாறி மடத்தூர் என ஆனது. இதை கட்டி முடிக்கவும் பிள்ளை வரம் கிடைக்கவே அவன் நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த இடத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலை கட்டி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் கல்லாலான மூலஸ்தானமும் அதன் முன்பகுதி மண்டபம் ஓட்டு கூரையாகவும் இருந்திருக்கிறது. அதன்பிறகு 1923ஆம் ஆண்டில் ஊர் பெரியவர்கள் திருச்செந்தூரில் இருந்து மண் எடுத்து வந்து திருச்செந்தூர் முருகனைப் போன்ற சிலை செய்து பழைய கோயிலை புதுப்பித்துள்ளனர். 1986 ஆம் ஆண்டில் மகா மண்டபம் அமைக்கப்பட்டது. 1990 கோயிலின் முன் மண்டபம், ராஜகோபுரத்தின் பணிகள் நிறைவுபெற்று கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

       ராஜகோபுரம் வழியாக கோயிலில் நுழைந்தால் முன் மண்டபத்தை அடையலாம். அங்கு மகாமண்டபத்தின் செப்புக் கவசமிட்ட கொடிமரம், மயில் வாகனமும் காணப்படுகின்றன. மண்டபத்தின் வடக்குச் சுவரில் ஆறுமுகநயினார் சுதை சிற்பமாக காட்சி தருகிறார். தென் பகுதியில் காவல் தெய்வம் இருக்கிறது. மூலஸ்தானத்தின் அருகில் வீற்றிருக்கும் விநாயகர் மற்றும் அவருக்கு அருகில் நந்தி பக்கத்தில் மற்றொரு விநாயகர் இருக்கிறார்கள்.

கருவறையில் சுப்பிரமணிய சுவாமியின் வேலும், சேவல் கொடியும் தாங்கி காட்சியளிக்கின்றார். குழந்தை பெறும் அருள் பெரும் வரப்பிரசாதம் இவர் என்கிறார்கள். அங்குள்ள சுப்ரமணியன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ளவரைப்போல் உருவாக்கப்பட்டுள்ளது.

கோயிலின் திறந்த வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் சக்தி விநாயகர் கோயில் இருக்கிறது. வினோபாவின் பூமிதான இயக்கத்தை வலியுறுத்தி அவரது சீடர் 1865 ஆம் ஆண்டு இந்த பகுதிக்கு வந்தபோது இந்த கோவிலில் தங்கிய வரலாற்று நிகழ்வாக சொல்கிறார்கள்.

திருவிழாக்கள்:

ஆண்டு பெருவிழாவாக மாசி மாதம் கொண்டாடப்படுகிறது. முதல்நாள் கொடியேற்றப்பட்டு பத்துநாட்கள் சிறப்பாக உற்சவர் வீதி உலா வரும் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ் மாத கடைசி வெள்ளி மற்றும் விசேஷ தினங்களில் பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறுகின்றன. வைகாசி விசாகம் கார்த்திகை தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மடத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தென்காசி

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top