Sunday Dec 22, 2024

பயரி கோடி சூர்யபிரகாசர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி

பயரி கோடி சூர்யபிரகாசர் சிவன்கோயில், பயரி, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612802

இறைவன்

இறைவன்: கோடி சூர்யபிரகாசர் இறைவி: நாகாம்பிகை

அறிமுகம்

கும்பகோணம்- பட்டீஸ்வரம்- ஆவூர் – பயரி என வரவேண்டும் சிறிய அழகிய கிராமம், பிரதான தார்சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ளது சிவாலயம். சூரியன் வழிபட்டு பேறு பெற்ற தலம் ஆதலால் கோடி சூர்யபிரகாசர் என பெயர். அம்பிகையின் பெயர் நாகாம்பிகை முகப்பு கோபுரம் இல்லை, சிறிய மண்டபம் போன்ற அமைப்பு இறைவன் முன் உள்ளது இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். சிற்றாலயங்களில் செல்வவிநாயகர், முருகன் வள்ளி தெய்வானையும், மகாலட்சுமியும் உள்ளனர். வடகிழக்கில் சனி, சூரியன் சிறு லிங்க பாணம் ஆகியன உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயம் கால மாற்றத்தினாலும் பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் சிதிலடைய ஆரம்பித்துள்ளது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பயரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top