Tuesday Oct 15, 2024

ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்- 612 804. திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4374-265 130.

இறைவன்

இறைவன்:சொர்ணபுரீஸ்வரர், இறைவி: சொர்ணாம்பிகை

அறிமுகம்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்காவிரி தென்கரைத் தலங்களில் 97ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இக்கோயில் இந்தியாவின் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வலங்கைமானிலிருந்து குடவாசல் செல்லும் வழியில் இரண்டு கி.மீ தொலைவில் குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் சொர்ணபுரீஸ்வரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது சிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர், தட்சிணாமூர்த்தி, சந்திரன், உரோமச மகரிஷி, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், தட்சிண கைலாசர், கும்பகர்ண பிள்ளையார், சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர். உள்ளனர்

புராண முக்கியத்துவம்

முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் தியாகராஜர் கோயில் கட்டிக்கொண்டிருந்த காலம் அது. கண்டதேவர் என்ற மந்திரி திருவாரூர் கோயில் கட்டுவதற்காக மலையடிவாரத்திலிருந்து கல் கொண்டு வர சென்றார். இருட்டி விட்டது. இவர் சிவதரிசனம் செய்யாமல் எப்போதும் உணவருந்த மாட்டார். எனவே சாலையோரமாக படுத்துவிட்டார். சிவன் இவரது கனவில் தோன்றி, “”நான் அருகே உள்ள வன்னிமரத்தின் அடியில் உள்ளேன். என்னை தரிசித்து விட்டு உணவருந்து,”என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார். மந்திரி வந்து பார்த்த போது சிவன் கூறியபடியே வன்னிமரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது. உடனே அவர் திருவாரூர் கொண்டு செல்லும் ஒவ்வொரு வண்டியிலிருந்து ஒரு கல்லும், ஒவ்வொரு சுண்ணாம்பு மூட்டையிலிருந்து ஒரு கரண்டி சுண்ணாம்பும் கொண்டு வந்து இந்த இடத்தில் கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி விட்டார். ஒரு முறை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் நடந்த விஷயங்கள் எல்லாம் கூறி, இந்த கோயிலை வந்து பார்க்கும்படி வேண்டினார். மன்னன் வந்து கோயிலை பார்த்து விட்டு,””மந்திரியாரே! இந்த கோயில் கட்டுவதற்கு உண்டான செலவையும், அதற்கான தர்மத்தையும் என்னிடம் கொடுத்துவிடு,”என்றார். அதற்கு மந்திரி, “”மன்னா!என் உயிரைக்கொடுப்பேனே தவிர இந்த தர்மத்தை கொடுக்க மாட்டேன்,”என்றார். இதனால் கோபமடைந்த ராஜா,””என் சொத்தில் தானே இந்தகோயிலை கட்டினாய். எனவே திருடிய குற்றத்திற்காக இந்த கோயில் சன்னதி முன்பு இவனது தலையை வெட்டுங்கள்,” என உத்தரவிட்டார். மன்னனின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டது. வெட்டிய தலை பூமியில் விழுந்தவுடன் “ஆண்டவனே’ என்றது. இதையறிந்த ராஜா ஒரு உண்மையான சிவபக்தனை வெட்டிவிட்டோமே என வருந்தி, தன்னையும் வெட்ட நினைக்கிறார். அப்போது இறைவன் தோன்றி “”ராஜாவும், மந்திரியும் கணவன் மனைவி மாதிரி இருக்க வேண்டும்” என்று கூறி மந்திரிக்கு உயிர் கொடுத்து இருவரையும் ஆசிர்வதிக்கிறார். அன்று முதல் இத்தலம் “ஆண்டவன் கோயில்’ எனப்பட்டது.

நம்பிக்கைகள்

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

காசிப முனிவர் வழிபாடு செய்துள்ளார். ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது.சன்னிதிகள் உயரமான இடத்தில் அமைப்பு. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 160 வது தேவாரத்தலம் ஆகும்.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆண்டான்கோவில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top