வீராரெட்டிதெரு கைலாசநாதர் சிவன்கோயில், அரியலூர்
முகவரி :
வீராரெட்டிதெரு கைலாசநாதர் சிவன்கோயில்,
வீராரெட்டிதெரு, உடையார்பாளையம் வட்டம்,
அரியலூர் மாவட்டம் – 606206.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
காமாட்சி
அறிமுகம்:
பிரதான நெடுஞ்சாலையில் உள்ள வீரசோழபுரத்தின் மேற்கில் ஒரு கிமீ தூரத்தில் தான் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்கு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் இருந்தது. காலப்போக்கில் பெரிய கோயில் சிதைந்து போனதன் பின்னர் மீண்டும் எடுத்து கட்டியுள்ளனர். இறைவன் கைலாசநாதர் இறைவி காமாட்சி கிழக்கு நோக்கிய ஒரு கருவறையில் இறைவனும் தெற்கு நோக்கிய ஒரு கருவறையில் இறைவி காமாட்சி அம்மனும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இரு சன்னதிகளை இணைக்கும் வகையில் ஒரு தகர கொட்டகை போடப்பட்டுள்ளது, அதில் இரு சன்னதிகளையும் நோக்கி நந்தி மற்றும் பலி பீடங்கள் உள்ளன. இரு கருவறை வாயிலிலும் தலா ஒரு விநாயகர் மட்டும் உள்ளனர். கோஷ்ட தெய்வங்கள் இல்லை. வழமையான இடத்தில் சண்டேசரும் இல்லை, சன்னதி உள்ளேயே இருக்கின்றாரா என அவதானிக்க முடியவில்லை. ஒரு மரத்தடியில் நல்வேலைப்பாடுகள் கொண்ட நந்திகள் இரண்டும் ஒரு பலிபீடமும் உள்ளன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வீராரெட்டிதெரு
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரியலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை