வாழப்பட்டு விருத்தகிரீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
வாழப்பட்டு விருத்தகிரீஸ்வரர் சிவன்கோயில்,
வாழப்பட்டு, பண்ருட்டி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607105.
திரு.சௌரிராஜன் கைபேசி எண் – 73584 08500
இறைவன்:
விருத்தகிரீஸ்வரர்
அறிமுகம்:
கடலூரின் மேற்கில் உள்ளது நெல்லிகுப்பம். நெல்லிக்குப்பம் தாண்டிய 2 கிமீ தூரத்தில் திருக்கண்டீஸ்வரம் கோயிலுக்கு ஒரு சிறிய வலதுபுற சாலை திரும்புகிறது, அதனை கடந்து 100 மீட்டர் சென்றதும் இடது புறம் தகரத்தில் செய்யப்பட்ட சிறிய வளைவு ஒன்று உள்ளது. அதன்வழி சென்று இடதுபுறம் உள்ள சிறிய சந்து ஒன்றில் உள்ளது இந்த விருத்தகிரீஸ்வரர் கோயில். திருக்கண்டீஸ்வரம் கோயிலின் அஷ்ட திக்கிலும் லிங்க மூர்த்திகள் கோயில் கொண்டிருந்ததாக கூறுகின்றனர். அதில் ஒன்றே இது எனப்படுகிறது.
சில வருடங்களின் முன்னர் ஒரு வாழை தோப்பில் உடைந்த ஆவுடையாருடன் ஒரு லிங்கமூர்த்தி இருப்பதை அறிந்த நமது நண்பர் திரு.BabuSelvaraj சென்று தேடிப்பார்த்தும் இருப்பிடம் அறியமுடியாமல் இந்த சந்துக்குள் நுழைய…. அப்போது நல்லபாம்பு ஒன்று படமெடுத்தபடி இவரை திரும்பி பார்த்துவிட்டு இந்த வாழை தோப்பினுள் சென்று மறைந்தது. சற்று தயக்கத்துடன் அது சென்ற வழியில் சென்று பார்த்தால் ஒரு பெரிய லிங்கமூர்த்தி உடைந்த ஆவுடையாருடன் மேற்கு நோக்கிய நிலையில் இருக்ககண்டு விளக்கிட்டு வணங்கி வந்தாராம். பின்னர் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து புதிய ஆவுடையார் புதிய நந்தி என முழுமையான கோயிலாக ஆக்கிட, அவர் ஒற்றை கருவறையாக கட்டிட பணிகளை ஆரம்பித்தார். கோயில் கட்டும் பணி அதிட்டானம் வரை கட்டியிருந்த நிலையில் அவர் காலமாகிவிட………. சில காலம் பணிகள் அப்படியே கிடந்தன.
பின்னர் கடலூரை சேர்ந்த அன்பர் திரு.செளரிராஜன் அவர்கள் பெருமுயற்சி எடுத்து சிகரம் வரை கட்டுமான பணிகளை முடித்துள்ளார். கோஷ்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் பிரம்மன், லிங்கோத்பவர் தென்முகன் என வந்தமரந்துள்ளனர். மேல் பூச்சு அம்பிகை கருவறை இவற்றை செய்து முடிக்க வேண்டியுள்ளது. திரு.சௌரிராஜன் கைபேசி எண் – 73584 08500
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வாழப்பட்டு
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி