வளையமாதேவி பானுகோடீஸ்வரர் சிவன் கோயில், கடலூர்

முகவரி
வளையமாதேவி சிவன் கோயில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம்
இறைவன்
இறைவன்- பானுகோடீஸ்வரர் இறைவி- பாலாம்பிகை
அறிமுகம்
சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு- விருத்தாசலம் சாலையில் உள்ளது, வளையமாதேவி. ஊரின் வடகிழக்கு மூலையில் உள்ளது இக்கோயில், சாலையோரத்தில் வைணவ கோயில் ஒன்றுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் என்ற ஸ்வயம்பு க்ஷேத்திரத்தில் இரணியாக்ஷ்ன மகள் ஜில்லிகை என்ற மணிமாலையும், முத்தமாலையும் பூவராகப் பெருமாளை குறித்து தவம் புரிநது மணிமுத்தா நதி மற்றும் சுவேத நதி என இரு ஆறுகளாக ஓடுகின்றனர். குருத்துரோகம் புரிந்த காத்யாயன முனிவர் தன் பாவம் அகல மணிமுத்தா நதியின் வடக்கே உள்ள இவ்வூரில் லிங்கம் அமைத்து, வெகுகாலம் தவம்புரிந்து தன் பாவம் நீங்கப் பெறுகிறார். புத்திரப் பேறு வேண்டி, தாயாரை நோக்கி தவம் புரிந்து . தவத்தை மெச்சி தாயார் தானே அவருக்கு மகளாக அவதரித்தார். காத்யாயனி என்று பெயரிட்டு வளர்ந்து வந்தார். பருவம் வந்தபின், மானிடர்களையோ அல்லது தேவர்களையோ மணக்கமாட்டேன் என்று உறுதி கொண்டு, பூவராகனையே மணமகனாக் கொள்வேன் எனறு உறுதியுடன் தவம் பரிந்து வந்தாள். பின்னர் காத்யாயன முனிவரும் பெண்ணின தவ வலிமையை பார்த்து, பூவராகப் பெருமானை வேண்டி, தன் புதல்வியின் நிலையை விளக்கி, தன் புதல்வியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினார். பூவராகப் பெருமானும் இசைந்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு தன் மகளான பெரியபிராட்டிக்கு சீதனமாக ”வளையம்” என்னும் செம்பொன் அணியை காத்யாயன முனிவர் சூரியனிடம் இருந்து பெறுகிறார். இது கோடி சூர்யபிரகாசம் உடையது. . கார்த்தியான முனிவர் சூரியனிடம் இருந்து வளை ஒன்று பெற்றதால் இவ்வூர் வளைய மாதேவி எனப்படுகிறது. பானு என்றால் சூரியன் அதனால் இங்கே இறைவன்- பானுகோடீஸ்வரர் இறைவி- பாலாம்பிகை இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகையும் இறைவனின் இடதுபுறம் தனி ஆலயம் கொண்டு கல்யாண கோலம் காட்டுகிறார். பிரகாரத்தில் சொக்கநாதர், துவார கணபதி ஆகியோரும் உள்ளனர். வெளிச்சுற்றில் விநாயகர் முருகன் ஆகியோர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளனர். வடகிழக்கில் அழகிய பைரவரும் நவகிரகங்களும் உள்ளனர். கருவறை முகப்பில் சனி பகவான் தனித்து உள்ளார். வழக்கம் போல் சிவன்கோயில் நிலத்தில் அரசு கட்டிடங்கள்(ஒரு ரேஷன் கடை, பஞ்சாயத்து அலுவலகம்) கோயிலை சுற்றி கட்டப்பெற்றுள்ள கொடுமை இவ்வூரிலும் தொடர்கிறது. போனால் போகிறது என சிறிய வாயில் மட்டும் அடைக்கப்படாமல் உள்ளது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முருகன்கோயில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி