ராராந்திமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
ராராந்திமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், ராராந்திமங்கலம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்
இறைவன்
இறைவன்: கைலாசநாதர்
அறிமுகம்
திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் பத்து கிமீ தூரம் சென்றால் மகிழஞ்சேரி பேருந்து நிறுத்ததின் கிழக்கில் செல்லும் சிறிய சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் ராராந்திமங்கலம் உள்ளது. என்ன இப்படி ஒரு பெயரா என திகைக்க வேண்டாம். ராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம் என்பதே மருவி ராராந்திமங்கலம் என ஆனது. அருகிலுள்ள திருமருகல் அல்லது திருவாருரின் பூஜைக்காக பணியமர்த்தப்பட்ட சதுர்வேத பண்டிதர்களுக்கு அளிக்கப்பட்ட ஊராகலாம். ஆனால் சதுர்வேதமங்கலத்திற்கு உரிய எந்த அடையாளங்களும் தற்போது இல்லை. பெரியதொரு குளத்தின் கிழக்கு பகுதியில் சிறிய பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இருந்த சிவாலயம் பிற்காலத்தில் முற்றிலும் சிதைவடைந்து போய்விட இறைவன் பெருமாள் கோயிலின் தென்புறம் இருக்கும் ஒரு பெரிய அரசமரத்தடியின் கீழ் குடிகொண்டுள்ளார். அவருக்கு ஒரு தகரகொட்டகை ஒன்றை ஊர்மக்கள் அமைத்துள்ளனர். ஒரு நந்தி எதிரில் உள்ளது, மரத்தின் அடியில் சில நாகர்கள் கிடத்தப்பட்டுள்ளன. பெருமாள் கோயில் நல்ல நிலையில் உள்ளது. நல்லோர் சிலர் முயற்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்திருக்கும் திடலின் ஒருபுறத்தில் கிழக்கு நோக்கிய ஒற்றை கருவறை கோயில் ஒன்றை அமைத்துள்ளனர். பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. வண்ணம் தீட்டுதல், பிரதிஷ்ட்டை மற்றும் குடமுழுக்கிற்கான பணிகள் மட்டுமே மீதமுள்ளன என எண்ணுகிறேன். இறைவன் – கைலாசநாதர். இறைவனும் விநாயகரும் முதலில் வந்தமரட்டும், பின்னர் பெரும் ஆலயமாக மாறும் என நம்புவோம். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராராந்திரமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நன்னிலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி