ராமநாதபுரம் ராமநாதசுவாமி சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
ராமநாதபுரம் ராமநாதசுவாமி சிவன்கோயில்,
ராமநாதபுரம், மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206
இறைவன்:
ராமநாதசுவாமி
இறைவி:
பர்வதவர்த்தினி
அறிமுகம்:
வடபாதிமங்கலத்தில் இருந்து நேர் தெற்கில் ஒரு சாலை குலமாணிக்கம் செல்கிறது, இங்கிருந்து இடது புறம் திரும்பி 2 கிமீ சென்றால் ராமநாதபுரம் அடையலாம். பெரியகொத்தூரின் தெற்கில் ஒரு கிமீ தூரத்தில் ராமநாதபுரம் உள்ளது. ஊரின் மையத்தில் பெரிய குளத்தின் வடகரையில் உள்ளது சிவன் கோயில். முற்றிலும் செங்கல் கொண்டு கட்டப்பட்ட கோயில்தான். இறைவன் ராமநாதசுவாமி இறைவி பர்வதவர்த்தினி. ராமர் லிங்கம் அமைத்து வழிபட்டதால் ராமநாதசுவாமி என்கின்றனர். பர்வதராஜன் மகளாதலால் இங்கே அம்பிகை பர்வதவர்த்தினி ஆகியுள்ளார்.
கோயில் இடத்தினை பெரும்பகுதி அரசு கட்டிடங்கள் ஆக்கிரமித்து உளளன. கோயில் வாயிலில் ஒரு பெரிய அரசமரம் வளர்ந்து நிற்கிறது. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும் அம்பிகை தெற்கு நோக்கிய கருவறையும் கொண்டுள்ளனர். இரு கருவறைகளையும் இணைக்கிறது ஒரு முகப்பு மண்டபம் அதில் ஒரு நந்தி இறைவனை நோக்கி உள்ளது.
கருவறை கோட்டங்களில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை உள்ளனர். தென்மேற்கில் சிறிய விநாயகர் ஆலயம் வடமேற்கில் வள்ளிதெய்வானை முருகன் ஆலயமும் உள்ளது. வடபுறம் சண்டேசர், வடகிழக்கில் நவகிரகங்கள் பைரவர், சந்திரன் உள்ளனர். ஒரு தனி மாடத்தில் சூரியன் உள்ளார். தென்புறம் மதில் சுவரை ஒட்டியவாறு ஐயப்பன் சன்னதி கட்டப்பட்டுள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராமநாதபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி, திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி