Tuesday Nov 19, 2024

மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயண சுவாமி கோவில், கர்நாடகா

முகவரி

மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயண சுவாமி கோவில், பாண்டவபுரா, தாலுகா, மேல்கோட்டை, கர்நாடகா 571431

இறைவன்

இறைவன்: செல்வநாராயணசுவாமி

அறிமுகம்

மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில் அல்லது மேல்கோட்டை திருநாராயணர் கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா வருவாய் வட்டத்தில் மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம் எனும் மலையூரில் அமைந்துள்ளது. விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல கோவில்களில் செல்வநாராயணசுவாமி கோவில் ஒன்றாகும். பெங்களூரில் இருந்து 156 கிலோமீட்டர் தொலைவிலும், மைசூரிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

மூலவர் பெயர் திருநாராயணர்; உற்சவர் பெயர் செல்வநாராயணர்; தாயார் பெயர், திருநாராயணி. திருநாராயணபுரம் கோயில் உற்சவர் செல்வநாராயணரின் சிலை, ஒரு சமயம் டில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருந்தது. பாதுஷாவின் மகள் நாராயணர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். ராமானுஜர் உற்ஸவரை மீட்க வடநாட்டுக்குப் புறப்பட்டார். இளவரசி அரண்மனையில் இல்லை. பாதுஷாவின் அனுமதியுடன் இளவரசியின் அந்தப்புரத்தில் செல்வநாராயணர் விக்ரஹத்தைக் கண்டார். அவரது கண்களில் ஆனந்தக்கண்ணீர்ணீ பெருகியது. இதோ! என் செல்வப்பிள்ளை என்று உரக்க அழைத்தார். அந்தச்சிலை சின்னஞ்சிறு கண்ணனாக மாறியது. தன் சின்னஞ்சிறு பாதங்களில் சலங்கைகள் ஒலிக்க, ராமானுஜரின் மடியில் வந்து அமர்ந்தார். மீண்டும் விக்ரகமாக மாறிவிட்டார். அதை திருநாராயணபுரம் கோயிலுக்கு கொண்டு வந்தார். அவ்வாறு அவர் திரும்பிய நாளான மாசிகேட்டையன்று டில்லி உற்ஸவம் கொண்டாடப்படுகிறது. பாதுஷாவின் மகள் பெருமாளைத் தேடி நாராயணபுரம் வந்துவிட்டாள். செல்வநாராயணப் பெருமாளின் திருவடியில் ஐக்கியமானாள். இவள், மூலவரின் பாதத்தில் வரநந்தினி என்ற பெயரில் இருப்பதாக ஐதீகம். நாட்டுப்புறங்களில் வரநந்தினியை பீபி பீ நாச்சியார் என்று குறிப்பிடுவர். மூலவர் திருநாராயணர் மேற்கு நோக்கி, சங்கு, சக்கரத்துடன் நிற்கிறார். ஒரு கையில் கதாயுதம் உள்ளது. பத்ரி என்னும் இலந்தை மரமே இங்கு தலவிருட்சம். திருநாராயணப் பெருமாளை தரிசித்தவர்கள் பத்ரிநாத் சென்றுவந்த புண்ணியத்தை அடைவர். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த வரதநந்தினி என்னும் பெண் மூலவரின் பாதத்தில் வீற்வீ றிருக்கிறாள். சாண்டில்ய மகரிஷி இத்தலத்தில் தவமிருந்து பெருமாளை பத்ரிநாராயணராகத் தரிசிக்கும் பேறு பெற்றார். ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், திருக்கோஷ்டியூரில் ராமானுஜருக்கு முக்கியத்துவம் இருப்பது போன்று, திருநாராயணபுரத்திலும் உண்டு. இங்கு ராமானுஜர் உபதேச முத்திரையுடன் காட்சி தருகிறார். ஜெயந்தி விழாவில் ராமானுஜர், செல்வநாராயணர் விக்ரகத்தை தாலாட்டுவது போல பாவனை செய்து அர்ச்சகர்கள் பாடுவர். இதற்கு உடையவர் தாலாட்டு என்று பெயர். அபிநயத்தோடு பாடும் இத்தாலாட்டு கேட்பதற்கு இனிமையாக இருக்கும். பெருமாளின் திருக்கல்யாண வைபவத்தில் திருநாராயணரும், யதுகிரித்தாயாரும் பவனிவரும்போது, ராமானுஜரும் மணமக்களைப் பின்தொடர்ந்து வருகிறார். இந்நிகழ்ச்சி, ராமாவதாரத்தில் சீதாராமரைத் தொடர்ந்து வந்த லட்சுமணரைக் குறிப்பதாக உள்ளது. யதுகிரிதாயார் தாமரை மலரைக் கையில் ஏந்தி நிற்கிறாள். உற்சவருக்கு செல்வநாயகி என்பது திருநாமம்.

சிறப்பு அம்சங்கள்

மேல்கோட்டையின் மையத்தில் செல்வநாராயணசுவாமி கோவில் உள்ளது. ஸ்ரீ செல்வநாராயணசுவாமி கோவிலுக்குச் செல்வதற்கு முன், மக்கள் பஞ்ச கல்யாணி குளத்தைப் பார்வையிடலாம். இந்த குளம் மண்டபங்களுடன் மிகப் பெரியது, புவனேஷ்வரிமண்டபம் இங்கு அமைந்துள்ளது. ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், திருநாராயணரை அலங்கரிக்கப்படும் வரை கிரீடத்தை யாரும் பார்க்கக்கூடாது என்று நம்பப்படுவதால், கிரீடங்கள் எடுக்கப்படுவதற்கு முன்பு முக்கிய குருவான பூசாரி கண்மூடித்தான் இருப்பார்.

திருவிழாக்கள்

பங்குனியில் பிரம்மோற்ஸவம், நரசிம்ம ஜெயந்தி, இராமானுஜர் ஜெயந்தி, பங்குனி பூசத்தில் வைர முடிசேவை.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேல்கோட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மைசூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பெங்களூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top