மண்ட்சவுர் தர்மராஜேஷ்வர் கோவில், மத்தியப் பிரதேசம்
முகவரி
மண்ட்சவுர் தர்மராஜேஷ்வர் கோவில், சந்த்வாசா, மண்ட்சவுர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் – 458883
இறைவன்
இறைவன்: தர்மராஜேஷ்வர்
அறிமுகம்
தர்மராஜேஸ்வர் கோவில் பழங்கால குகைக் கோவில், இது மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சவுர் மாவட்டத்தில் சந்த்வாசா நகரில் அமைந்துள்ளது. இந்த கோவில் 50 மீ நீளம், 20 மீ அகலம் மற்றும் 9 மீ ஆழம் கொண்ட திடமான பாறையால் செதுக்கப்பட்டுள்ளது. இது இந்திய குடைவரை கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. தர்மராஜேஸ்வர் கோவில் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புராண முக்கியத்துவம்
தர்மராஜேஸ்வர் கோவிலின் வரலாறு 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கோவிலில் சபா மண்டபம் மற்றும் ஷிகரத்துடன் கூடிய கருவறை உள்ளது. இக்கோயிலின் உச்சி வட இந்திய பாணியில் உள்ளது. தர்மராஜேஸ்வர் கோவிலின் கட்டிடக்கலை எல்லோராவின் கைலாசக் கோயிலை ஒத்திருக்கிறது. 14.53 மீ உயரமும் 10 மீ அகலமும் கொண்ட பெரிய பிரமிடு வடிவ கோவில் நடுவில் உள்ளது. பிரதான கோவில் பைரவர், காளி, மற்றும் பார்வதி தேவி போன்ற பல்வேறு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழு சிறிய கோவில்களால் சூழப்பட்டுள்ளது. முக்கிய கோவிலில் விஷ்ணு சிலையுடன் ஒரு பெரிய சிவலிங்கமும் உள்ளது. நுழைவு வாயில் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் பொறிக்கப்பட்ட உருவங்களை செதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 170 குகைகள் உள்ளன, அவை சமண கலாச்சாரத்தைச் சேர்ந்தவை. குகைகளுக்குள், ரிஷப தேவர், நேமிநாதர், பார்சுவநாதர், சாந்திநாதர் மற்றும் மகாவீரர் ஆகிய சமண தீர்த்தங்கரர்கள் என அடையாளம் காணப்பட்ட ஐந்து சிலைகளைக் காணலாம். உள்ளூர்வாசிகள் அவற்றை பாண்டவர்களின் சிலைகளாக கருதுகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
தர்மராஜேஷ்வர் கோயில் குடைவரை கலைக்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் தருகிறது. இந்த ஒற்றைக்கல் கோயில் திடமான இயற்கை பாறையைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது, மற்றும் கட்டிடக்கலை கைலாச கோவில், எல்லோர குகைகள் போன்றது. முக்கிய கோயிலில் 7 சிறிய சிவாலயங்களால் சூழப்பட்ட பகவான் விஷ்ணுவும் சிவலிங்க மூர்த்தியும் உள்ளன.
திருவிழாக்கள்
தினசரி பூஜைகள் தவிர, மகா சிவராத்திரியையொட்டி கோவிலில் பிரமாண்டமான திருவிழா நடைபெறுகிறது.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சந்த்வாசா நகரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஷம்கர்
அருகிலுள்ள விமான நிலையம்
இந்தோர்