மணக்குன்னம் கைலாசநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
மணக்குன்னம் கைலாசநாதர் சிவன்கோயில் திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609807.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி
அறிமுகம்
கும்பகோணம் – சென்னை சாலையில் உள்ள அணைக்கரை எனும் ஊரின் முதல் பாலம் ஏறுவதற்கு முன்னர் வலதுபுறம் ஒரு சாலை திட்டச்சேரி செல்கிறது அதில் 2கிமீ. தூரம் சென்றால் உள்ளது மணக்குன்னம். மணல்மேடுகளால் ஆன பகுதி என்பதால் மணற்குன்றம் என வழங்கப்பட்டு பின்னர் மணக்குன்னம் என மருவியிருக்கலாம். ஊரின் கிழக்கு எல்லையில் ஒரு பெரிய குளத்தின் கரையோரத்தில் இறைவன் கோயில் கொண்டுள்ளார். பலப்பல ஆண்டுகளாக மக்கள் வரத்தின்றி போனதாலும், முன்னர் இறைவனை கொண்டாடி மகிழ்ந்த சிறுபான்மை அந்தணக்குடிகள், வேளாளர்குடிகள் இனி கிராமங்கள் நமக்கு பாதுகாப்பும் இல்லை, ஊதியம் தரவல்லாரும் இல்லை என அண்டை நகரங்களுக்கு குடி பெயர்ந்துவிட ஆலயங்களில் நித்திய கருமங்கள் நின்றுபோய்விட, உற்சவர்களை அரசு தூக்கிப்போய்விட, கோயில்கள் பாழ்பட்டுபோயின. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்று தான் இந்த மணக்குன்னம்.
புராண முக்கியத்துவம்
விரிசல் அடைந்து காணமல் போயின மதில் சுவர்கள், சிற்றாலயங்கள் சில காலம் தாக்கு பிடித்தன, சிலைகளில் சில உடைந்து சரிந்தன, சரித்து உடைக்கப்பட்டன சில. சிதைந்து விட்ட கருவறைகள் இரண்டும் பல வருடங்களாக அச்சாலை வழி வருவோர் போவோரை உள்ளுணர்வால், தங்களை உயிர்ப்பிக்க வேண்டுகோள் வைத்தன. வெட்டவெளியில் இருந்த லிங்கத்திற்கு ஒரு தகர கொட்டகை போட்டு திருப்பணிக்கு பிள்ளையார் சுழி போட்டுவைத்தன ஒரு அடியார் குழுமம். இதோ தொடங்கிவிட்டது திருப்பணிகள். சாரங்கள் சுவரேறின, போனது வந்தது என பழுது தட்டப்பட்டன கருவறைகள். கருவறையில் லிங்கமும் விநாயகரும் மட்டும் உள்ளனர். இருக்கும் ஒரு வடமேற்கு சிற்றாலயத்தில் சுப்பிரமணியர் நின்றிருக்கிறார். வேறெந்த தெய்வமும் இல்லை, எல்லா கோடுகளும் முதலில் இருந்தே போடப்படவேண்டும். விவசாய கிராமம், வேறெந்த பொருள் வரவுக்கும் வழியில்லாத மக்கள். மிகவும் வெள்ளந்தியான மக்கள் என்றே சொல்லவேண்டும், ஏனெனில் எட்டுவரி பேனரில் பத்து தவறுகளுடன் அடித்து கொடுத்ததை மனமுவந்து மாட்டிவைத்திருக்கிறார்கள் அல்லவா? தொடர்பு எண் பேனரில் உள்ளவாறு -9442243787
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணக்குன்னம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி