போலோ வனம் சமண கோயில் – 2, குஜராத்
![](https://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/polo-forest-jain-temple-2-gujarat.jpg)
முகவரி
போலோ வனம் சமண கோயில் – 2, குஜராத் அபாபூர், விஜயநகர், அந்தர்சும்பா, குஜராத் 383460
இறைவன்
இறைவன்: பார்சுவநாதர்
அறிமுகம்
அபாப்பூர் என்பது குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் போலோ வனப்பகுதிக்கு அருகில் உள்ள அபாபூர் கிராமத்தில் அமைந்துள்ள சமண கோயில்களின் குழு. அபாபூர், போலோ மற்றும் அந்தர்சுர்பா தளங்களில் அருகாமையில் உள்ள சமணம் மற்றும் சிவன் கோவில்கள், இடைக்காலத்தில் சமணம் மற்றும் இந்து மதம் இணைந்து இருந்ததைக் குறிக்கிறது. அபாபூர் சமண கோயில்கள் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. சமணம் மற்றும் சிவன் கோவில்கள் இரண்டும் சிதிலமடைந்த நிலையில் வெயில் மற்றும் மழையின் காரணமாக கருப்பாக மாறியுள்ளது.
புராண முக்கியத்துவம்
சமண கோயில் 2 செங்கற்கள் மற்றும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது, இது சன்னதி, அந்தராளம் மற்றும் மண்டபங்களைக் கொண்ட ஒரு திரி-அங்கி (மூன்று-உறுப்பு) கோயிலாகும், அதன் எஞ்சியிருக்கும் பீடத்திலிருந்து அடையாளம் காண முடியும். இது கருவறையின் கதவுச் சட்டத்தில் பார்சுவநாதரைக் கொண்டுள்ளது. கீர்த்திமுக உருவங்களால் அலங்கரிக்கப்பட்ட, வாசல் அதன் இரு முனைகளிலும் குபேரனின் உருவங்களைக் கொண்டுள்ளது. கோவில் வளாகத்தில், மரங்கள் அதிகளவில் வளர்ந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலம்
15 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அபாப்பூர், போலோ வனம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அகமதாபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
அகமதாபாத்