Wednesday Dec 25, 2024

புவனேஸ்வர் லிங்கராஜர் கோயில், ஒடிசா

முகவரி

புவனேஸ்வர் லிங்கராஜர் கோயில், லிங்கராஜ் நகர், பழைய டவுன், புவனேஸ்வர், ஒடிசா 751002, இந்தியா

இறைவன்

இறைவன்: லிங்கராஜர்

அறிமுகம்

புவனேஷ்வர் நகரத்தில் உள்ள மிகப்பெரிய கோயிலாக இந்த லிங்கராஜ் கோயில் வீற்றிருக்கிறது. பல காரணங்களுக்காக இந்த கோயில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நகரத்திலுள்ள மிக தொன்மையான கோயில் எனும் பெருமை அவற்றுள் முதன்மையான ஒன்று. இந்த கோயில் 10 அல்லது 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. புபனேஷ்வர் நகரத்தின் முக்கிய அடையாளச்சின்னமாகவும் பாரம்பரிய வரலாற்றுச்சின்னமாகவும் இந்த லிங்கராஜ் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. லிங்கராஜர் ஆலயம், கலிங்கக் கட்டிடக் கலையின் கம்பீரத்தை பளிச்சென்று வெளிப்படுத்துகிறது. மென்மையாகத் தெரியும் சிவப்புக் கல்லில் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. லிங்கராஜர் ஆலயத்தை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். கருவறை, வேள்வி மண்டபம், கோக மண்டபம் மற்றும் நாட்டிய சாலை. சிம்ம துவாரம் எனும் நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழையலாம். நுழைகையில் இருபுறமும் யானைகளைக் தங்கள் காலடியில் போட்டு நசுக்கும் சிங்கங்களின் உருவங்களைக் காண முடிகிறது. கருவறையிலுள்ள சிவலிங்கம் சுயம்பு – அதாவது,தானாகவே உருவானது. அருகே விநாயகர், கார்த்திகேயர், பார்வதி ஆகியோரின் திருவுருவங்களும் உள்ளன.

புராண முக்கியத்துவம்

சிவனின் வடிவமான ஹரிஹரனுக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயில் இந்தியாவிலுள்ள மிகச்சிறந்த ஹிந்துக்கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 55 மீ உயரம் உள்ள இந்த கோயிலின் ஒவ்வொரு அங்குலப்பரப்பிலும் நுணுக்கமான சிற்பச்செதுக்கல்கள் வெகு விஸ்தாரமாக பொதிக்கப்பட்டிருக்கின்றன. அதிநவீன கட்டிடங்களின் வடிவமைப்புகளுக்கெல்லாம் சவால் விடும்படியான நேர்த்தியுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் அக்காலத்திய இந்திய மண்ணின் நாகரிக மேன்மைக்கு சான்றாக வீற்றிருக்கிறது. தற்போதைய நவீன யுகத்திலும் சில கடுமையான விதிமுறைகள் அல்லது மரபுகள் இக்கோயிலில் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதாவது, இன்றும் இந்த கோயிலில் ஹிந்துக்கள் அல்லாதாருக்கு அனுமதி இல்லை. இருப்பினும் சுற்றுச்சுவரை ஒட்டிய ஒரு பீடம் அமைக்கப்பட்டு அதிலிருந்தபடி மற்றப்பிரிவினர் கோயிலை தரிசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த ஊரில் மிகப் பெரிய கோவில்…. 180 அடி உயரத்தில் வானளாவி நிற்கிறது…. #சோம வம்சத்தின் மூன்று தலைமுறை மன்னர்களைக் கண்டது இந்தக் கோவில்.,,….. ஏழாவது நூற்றாண்டில் #யயாதி கேசரி என்னும் மன்னன் தன் தலைநகரை புவனேஸ்வருக்கு மாற்றியபோது இந்தக் கோவிலைக் கட்டுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டான்…. ஆனால் கோவிலில் காணப்படும் குறிப்புகள் கி.பி.1114-1115-ல் ஆண்ட #அனந்தவர்மன்_சோடகங்கா என்பவனுடைய காலத்தில் இந்தக் கோவில் கட்டுவதற்காக நிலம் மான்யமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கின்றன…. இந்தக் கோவில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்…. மற்ற பகுதிகளான ஜக்மோகனா (வழிபாட்டுக் கூடம்), போக மண்டபம் (காணிக்கை மண்டபம்), நாட்டிய மண்டபம் (கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடம்) ஆகியவை பிறகு வந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்….கோவிலின் அளவும் பரிமாணமும் நம்மை அசர வைக்கின்றன…. இது கலிங்கக் கட்டுமானத்தின் உச்சத்தைப் பறை சாற்றுகிறது…. நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கிறது…. மேலே கொடி பறக்கிறது…. கட்டமைப்பு வளைகோட்டு வடிவத்தில் உள்ளது…. கருவறையின் மேல் உள்ள இந்தக் கட்டபைப்பு துயுலா என்று அழைக்கப்படுகிறது….இரவில் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் அந்த சங்கரனே விஸ்வரூபம் எடுத்து நிற்பது போல் தோன்றுகிறது…. கோவில் #பின்துசாரஸ் ஏரிக் கரையில் உள்ளது…. உமையவளின் தாகத்தைத் தணிப்பதற்காக சிவன் இந்த ஏரியை உருவாக்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன…. 25000 சதுர அடி பரப்பளவில் கட்டப் பட்டுள்ள இந்த லிங்கராஜர் கோவிலும் 100 சிறிய கோவில்களும் பாரிய மதில்களால் சூழப்பட்டுள்ளன…. பிரதான வாசல் கிழக்கிலும் மற்ற வாசல்கள் வடக்கிலும் தெற்கிலும் உள்ளன…. பஞ்சரதா திட்டத்தில் ஐந்து பிரிவுகளுடன் கட்டப்பட்ட இந்தக் கோவில் அலங்கார வேலைப் பாடுகளுக்காகவும், அற்புதமான தொழில் நுட்பத்திற்காகவும் பேர்போனது…. 54 மீட்டர் உயரமுள்ள துயூலாவும் (பிரதான கோபுரம்) 29 மீட்டர் உயரமுள்ள ஜக்மோகனாவின் மேலுள்ள பிரமிட் கோபுரமும் (பீதா துயூலா) முழுவதும் சிற்பங்களால் அணி செய்யப்பட்டுள்ளன…. போக மண்டபத்திலும் நாட்டிய மண்டபத்திலும் இது போன்ற சிற்பங்கள், கனரகக் கூரைகளைத் தாங்கும் கணைகளில் பொருத்தப்பட்டுள்ளன…. கருவறையின் ஒரு பக்கக் கதவில் சூலமும் மற்றதில் சக்கரமும் உள்ளன…. இது சுயம்பு லிங்கமாக இருந்தாலும் ஹரிஹர ரூபத்தில் உள்ளது. இது முன்பு செழித்து வளர்ந்திருந்த ஜகன்னாத வழிபாட்டையே குறிக்கும்…. பார்வதி, கார்த்திகேயர், கணேசர் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனியாக கோவில்களும் உள்ளன…. சிலைகளும் பெரிதாக உள்ளன…..அங்கேயும் அதியற்புதமான சிற்பங்களும் செதுக்கல்களும் இடம் பெற்றுள்ளன….

நம்பிக்கைகள்

லிங்கராஜர் மிக பிரமாண்டமாக காட்சி தருகிறார். இது ஹரிஹர ரூபம் என்கின்றனர். அதாவது திருமாலும் இந்த லிங்கத்தில் உறைந்திருப்பதாக நம்பிக்கை. அதனால்தான் அர்ச்சனைக்காக விற்கும் பூக்குடலையில் வில்வ தளங்களும் துளசி இலைகளும் சேர்ந்தே காணப்படுகின்றன.

சிறப்பு அம்சங்கள்

பொதுவாக ஓர் ஆலயத்தில் மைய சன்னிதியைச் சுற்றி பல கடவுளருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருப்பது சகஜம்தான். ஆனால் அப்படிப்பட்ட ஒவ்வொரு சன்னிதிக்கும் மிக உயரமான ஓர் விமான கோபுரமும் இருப்பது லிங்கராஜர் கோயிலில்தான். தாரிணி தேவிக்கு மட்டும் தனி விமானம் கிடையாது. மொத்த ஆலயத்தையும் அழகான கோணத்தில் காண்பதற்காக எல்லைப்புறச் சுவருக்கு அருகே ஓர் உயர்த்தப்பட்ட மேடை உள்ளது. இதில் ஏறி நின்று ஒட்டுமொத்த ஆலயத்தையும் காண முடியும். இது ஹரியும் ஹரனும் இணைந்த ஆலயமாகும். ஆலயத்துக்குள் நுழையும்போதே ஒரு திரிசூலம் தென்படுகிறது. சிவபெருமானின் சிலை, திருமாலின் சிலை இரண்டுமே நுழைவு வாயிலில் இரண்டு பக்கங்களில் காட்சியளிக்கின்றன. ஆக லிங்கராஜர் ஆலயம் ஹரி-ஹரன் ஆலயமாகவும் தோற்றமளிக்கிறது. கோவிலின் அளவும் பரிமாணமும் நம்மை அசர வைக்கின்றன…. இது கலிங்கக் கட்டுமானத்தின் உச்சத்தைப் பறை சாற்றுகிறது…. நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கிறது…. மேலே கொடி பறக்கிறது…. கட்டமைப்பு வளைகோட்டு வடிவத்தில் உள்ளது….

திருவிழாக்கள்

சிவராத்திரி, தேர் திருவிழா (ரத-யாத்திரை), மகா தீபம், கந்தன் யாத்திரை (சந்தன விழா) என்பது கோவிலில் கொண்டாடப்படும் 22 நாள் திருவிழா ஆகும்

காலம்

11 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

ஒடிசா

அருகிலுள்ள பேருந்து நிலையம்

லிங்கராஜ்நகர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

லிங்கராஜ்நகர் கோயில் சாலை

அருகிலுள்ள விமான நிலையம்

புவனேஸ்வர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top