நெல்லிக்குப்பம் சர்க்கரைஆலை குடியிருப்பு சிவன்கோயில், கடலூர்
முகவரி :
நெல்லிக்குப்பம் சர்க்கரைஆலை குடியிருப்பு சிவன்கோயில்,
நெல்லிக்குப்பம் சர்க்கரைஆலை குடியிருப்பு,
பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607105.
இறைவன்:
சிவன் – சக்தி
அறிமுகம்:
கடலூரில் இருந்து மேற்கில் பத்து கிமீ தூரத்தில் உள்ளது நெல்லிக்குப்பம். நெல்லிக்குப்பம் என்றாலே ‘இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை’தான் அனைவருக்கும் நினைவில் வரும். தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலை என்ற பெயரை தன்னகத்தே கொண்டு கம்பீரமாக 178 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இந்த ஆலையின் அலுவலக ஊழியர்கள் தங்க நூறாண்டு பழமையான குடியிருப்பு வளாகம் ஒன்று பிரதான சாலையில் உள்ளது. அதிக மரங்களடர்ந்த அழகான அமைதியான குடியிருப்பு.
இங்கு பிரதானமாக ஒரு விநாயகர் கோயில் உள்ளது அதில் பின்புறம் பழமையான ஒரு வில்வமரமும் நாவல்மரமும் இணையாக உள்ளன. அதனை இறைவன் இறைவியாக வணங்கி வந்தனர். தற்போது சில ஆண்டுகளின் முன்னம் ஒரு லிங்க மூர்த்தியும் அம்பிகையும் உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய சிவாலயமாக உருவாகி உள்ளது. இறைவன் எதிரில் சிறிய நந்தி பலிபீடம் உள்ளது. சிவன் – சக்தி என்றே பெயர் வைத்துள்ளனர்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி