நாககுடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
நாககுடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
நாககுடி, நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612303.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
நாகர்பட்டினத்தை தலைமையகமாக கொண்டு வாழ்ந்த நாகர்கள் வாழ்விடமாக இது கருதப்படுகிறது. அதனால் நாககுடி என அழைக்கப்படுகிறது. திருவாரூர் –கங்களாஞ்சேரியின் மேற்கில் வெட்டாற்றின் வடகரையில் ஒரு கிமீ தூரம். இங்கு ஒரு சிவாலயம் உள்ளது. இறைவி -ஆனந்தவல்லி இறைவன் – அகத்தீஸ்வரர். லக்ஷ்மிதேவி இங்கு இறைவனை வழிபட்டார் என்பது ஒரு செவி வழி செய்தி. அதனால் தான் இக்கோயிலில் தனி சன்னதியாக இறைவனை நோக்கியபடி இருந்ததாம். தென்னகம் வந்த அகத்தியர் பல தலங்களில் வழிபட்டார், அவர் வழிபட்டதலங்கள் 163 என்பது ஒரு தோராய கணக்கு. அவற்றில் ஒன்று தான் இக்கோயில் இறைவன். இதனால் இறைவனுக்கு யுக கணக்கு மட்டுமே கூற இயலும். தற்போதைய கோயில் வடிவமைப்பை வைத்து கணக்கிட்டால் சோழர்களின் ஆரம்ப காலம் எனலாம்.
ஆயிரம் வருடம் பழமையான ஒரு செங்கல் தளி இன்று முற்றிலும் சிதைந்து போய் நிற்கிறது. கருவறைகள், சுற்று கோயில்கள் என அனைத்தும் இடிந்து சிதைந்து விட்டன. எஞ்சியிருப்பது மூன்று நிலை ராஜகோபுரம் மட்டுமே, அதுவும் செடியை மரமமாக்கி மரத்தை விருட்சமாக்கி நிற்கிறது. பல முறை உழவார பணி மக்கள் சுத்தம் செய்தாலும் மீண்டும் உயிர்த்தெழுகிறது. இக்கோயிலில் இருந்த சில மூர்த்திகள் தனியாக ஒரு தகர கொட்டகையில் வைக்கப்பட்டு உள்ளன. கோயில் கோபுரத்தை ஒட்டி ஒரு மாடம் ஒன்று கட்டப்பட்டு அதில் அகத்திய மாமுனியின் தண்டம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பிரதோஷ நாட்களிலும் சிறப்பு நாள்களிலும் பூஜைகள் நடைபெறுகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாககுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நன்னிலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி