தொளார் சிவன் கோயில்
முகவரி
தொளார் சிவன் கோயில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம்
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
பெண்ணாடம் அடுத்த இறையூரின் வடக்கில் ஐந்து கிமி தொலைவில் உள்ளது தொளார். சற்று பெரிய கிராமம் தான், இங்குள்ள சிறிய ஏரிக்கரையின் மேல் கரையில் உள்ளது இந்த சிவாலயம். தொளார் என்ற பெயர் எவ்வாறு வந்திருக்கலாம் என பார்த்தால், திப்புத் தோளார் எனும் ஒரு புலவர் குறுந்தொகையின் முதல்பாடலாசிரியராக அறியப்படுபவர் இவர். இவரின் பெயரால் தோளார் என வழங்கப்பட்டு பின் தொளார் என வழங்கப்படுகிறது. ஹோய்சாள மன்னர்களான வீரநரசிம்மன், வீரசோமேஸ்வரன், ராமநாதன் ஆகியோர் சில காலம் இங்கு ஆட்சி செய்து சோழ மன்னன் மூன்றாம் ராஜராஜனுக்குப் பாண்டியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள உதவினர். திருமழபாடி மற்றும் காமரசவல்லி ஆகிய இடங்கள் ஹோய்சளர்களின் படைமுகாமாக இருந்தன. அச்சமயத்தில் இப்பகுதியில் அவர்களது தளபதிகளால் கட்டப்பட்ட கோயில் இது என ஊகிக்கலாம். பெரிய வளாகமாக உள்ளது திருக்கோயில் சுற்றிலும் கருங்கல் மதில் சுவர்கள் அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் மகா மண்டபம் என சிறப்பானதொரு கோயிலாக விளங்கியது. மிகவும் சிதிலமடைந்து இருந்த இக்கோயில் திருப்பணிக்காக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன? கோயிலின் பின் புற தெருவில் பெரிய தேர் ஒன்று பல ஆண்டு காலமாய் இறைவனின் தேரோட்டத்துக்காக காத்திருக்கிறது. இறைவன் தீர்த்தபுரீஸ்வரர் உடன் கோபுர வாயில் குடவரை விநாயகர் மட்டுமே உள்ளனர். கோபுர வாயிலின் எதிரில் ஒரு நந்தி ஒன்று இறைவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நிற்கிறது. விரைவில் திருப்பணி நிறைவடைய வேண்டுவோம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெண்ணாடம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பெண்ணாடம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி