தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்),சிவகங்கை

முகவரி :
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் – 630302.
இறைவன்:
ஸ்ரீ சுந்தரேஸ்வரர்
இறைவி:
ஸ்ரீ மீனாட்சி
அறிமுகம்:
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் அமைந்துள்ள இக்கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் முக்கிய கடவுள் சிவபெருமான் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் என்றும், அம்மன் ஸ்ரீ மீனாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சிவபெருமான் தங்கக் குதிரையில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகப் பழமொழி உண்டு.
இது நகரத்தார் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. நாகர சிவன் கோவில் தேவகோட்டையின் மிக அழகான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார்களால் கட்டப்பட்டது
புராண முக்கியத்துவம் :
63 நாயன்மார்களின் சிவத்தொண்டினை சிறுத்தொண்டர்புராணம் அல்லது பெரிய புராணம் என்று கூறுவர். இந்த நூலினை இயற்றிய சேக்கிழாரின் மீதும், அவர் இயற்றிய சிவபுராணத்தின் மீதும் தீராத பற்று வைத்திருந்தார் வன் தொண்டர் என்ற புலவர். சிவபுரா ணத்தை இயற்றிய சேக்கிழாரைப் புகழ்ந்து நூல் இயற்ற வேண்டும் என்று எண்ணினார். தமது எண்ணத்தை “மனோன்மணியம்’ என்ற நூலை இயற்றிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் வன்தொண்டரின் எண்ணப்படியே சேக்கிழார் மீது நூலினை இயற்றினார். மேலும் சேக்கிழாரைப் பாராட்டும் வகையில், அவருக்கு தனியாக கோயில் எழுப்பவும் முடிவெடுத்தார். ஆனால், சில சூழ்நிலைகளால் சிவனுக்கு கோயில் எழுப்ப முடிவெடுக்கப்பட்டது. மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதில் சேக்கிழாருக்கு தனியாக சன்னதி எழுப்பினார்.
நம்பிக்கைகள்:
திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
சிவபக்தர்களுக்கு பெரிய புராணம் என்றால் உயிர். நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் அற்புத நூல் இது. சேக்கிழார் சுவாமிகள் இதை இயற்றினார். அந்தப் பெருமானுக்கு கோயில் அமைக்க முயன்றார் வன்தொண்டர் என்ற புலவர். சிவவழிபாட்டின் முக்கிய நோக்கமே அடியார்களுக்கு தொண்டு செய்வது தான். இங்கே சிவனடியாரான சேக்கிழாருக்கு, இன்னொரு தொண் டரான வன்தொண்டர் கோயிலே எழுப்ப முயற்சித்தார். ஆனால், சில சூழ்நிலைகளால் அது சிவன் கோயி லாயிற்று. அங்கே சேக்கிழாரை உற்சவமூர்த்தியாக்கினார். இந்த கோயிலில் ஒலிப்பதற்காக பெரிய மணி ஒன்றை வன்தொண்டர் வாங்கினார். அதில், “சேக்கிழார் கோயில் மணி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்:
வைகாசி பூச நட்சத்திரத் தன்று சேக்கிழார் குரு பூஜையும் அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. அன்று வெள்ளியானையின் மீது வலம் வருகிறார். சித்திரை திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இதில் சம்பந் தருக்கு அம்பிகை பால் கொடுக்கும் உற்சவம் சிறப்பானது.












காலம்
1500 ஆண்டுகள் பழமையானது ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேவகோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தேவகோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை