திருவலம்சுழி வருணேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
திருவலம்சுழி வருணேஸ்வரர் சிவன்கோயில், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614208.
இறைவன்
இறைவன்: வருணேஸ்வரர்
அறிமுகம்
கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் ஏழாவது கிமீ-ல் உள்ளது திருவலம்சுழி. இங்கு பிரசித்தி பெற்றது கபர்தீஸ்வரர்/வெள்ளை பிள்ளையார்கோயில். இதே ஊரில் பிரதான சாலையில் சோழா ஓட்டலின் எதிரில் பெரிய தென்னம்தோப்பினுள் உள்ளார் இறைவன் வருணேஸ்வரர் பெரிய சிவாலயமாக இருந்து தற்போது லிங்கமூர்த்தியும் அவரின் எதிரில் நந்தியும், பைரவரும், ஒரு விநாயகரும் மட்டும் ஓர் தகர கொட்டகையில் உள்ளனர். உடைந்த நந்தியொன்று அருகில் கிடத்தப்பட்டுள்ளது. லிங்கமூர்த்தியின் அளவினை வைத்து பார்த்தால் அவரது பழம் கோயில் எத்தனை பெரிதாய் இருந்திருக்கும் என எண்ணி வியக்கவேண்டியுள்ளது. “எல்லாம் சில காலம்” என்பது இறைவனுக்கும் சேர்த்து தான் போலிருக்கிறது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவலம்சுழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி