Thursday Dec 26, 2024

திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில் கோவிலடி தஞ்சாவூர் மாவட்டம் – 613105 போன்:0436-2281488, 2281460, 9952468956

இறைவன்

இறைவன்: அப்பக்குடத்தான் இறைவி: இந்திரா தேவி, கமலவல்லி

அறிமுகம்

108 திவ்ய தேச கோவில்களில் 8-வது திவ்ய தலமாகவும். பஞ்சரங்க கோவில்களில் இரண்டாவது இடமாக அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் கோவிலடியில் எழுந்தருளியிருக்கும் அப்பாலரெங்கநாதர். கல்லணை- திருக்காட்டுப் பள்ளி சாலையில் கோவிலடி கிராமத்தில் காவிரி கரையோரத்தில் தரைமட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது அப்பால ரெங்கநாதர் கோவில்.

புராண முக்கியத்துவம்

கடந்த காலத்தில் துர்வாச முனிவரின் கடும் கோபத்திற்கு ஆளான உபமன்யு என்ற மன்னன் தன் நாடு நகரங்களை இழந்தான். செய்வது அறியாமல் திண்டாடிய உபமன்யுதன் சாபம் தீர தனக்கு சாபம் அளித்த துர்வாச முனிவரிடமே சரண் அடைந்து சாபம் தீர வழி வேண்டினார். துர்வாச முனிவர் உபமன்யு வின் சாபம் தீர அன்னதானம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதன்படி அன்னதானம் செய்ய கோவிலடி பகுதியில் தங்கியிருந்து அன்னதானம் செய்து வந்தார். அன்னதானம் செய்து வந்த ஒரு நாளில் வயதான அந்தணர் ஒருவர் மன்னன்முன் தோன்றி அன்னம் கேட்டார். தயாரித்து இருந்த உணவு அனைத்தையும் ஒருசேர உண்ட முதியவர் மீண்டும் உணவு கேட்டார். இதை கண்டு வியப்படைந்த மன்னர் முதியவரிடம் மன்னிப்பு கேட்டு தங்கள் பசியாற இன்னும் என்ன வேண்டும் என்று கேட்க. முதியவர் ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று கேட்டார். அப்போது தான் வந்திருக்கும் முதியவர் பெருமாளே என்று எண்ணி விரைந்து அப்பம் தயாரித்து குடத்தில் இட்டு முதியவரிடம் அளித்தார். அப்பம் நிரம்பிய குடத்தை உபமன்யுவிடம் இருந்து பெற்ற முதியவர் தன் உண்மையான உருவத்தை காட்டினார். இதனால் உபமன்யு சாபம் நீங்கியது. இந்த அற்புதம் நிகழ்ந்த இந்த இடமே கோவிலடி ஆகும்.

நம்பிக்கைகள்

அப்பக்குடத்தான்: பமன்யு மன்னனிடம் இருந்து அப்பம் பெற்றதால் கோவிலடி திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாள் அப்பக் குடத்தான் என்று அழைக்கப்படு கிறார். மூலஸ்தானத் தில் வலது கரத்தில் அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் புஜங்க சயனத்தில் மேல்நோக்கி உள்ளார் அப்பக்குடத்தான். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முந்தி அடியெடுத்து வைத்த தலம் என்பதால் கோவிலடி என்று பெயர் வழங்கப்படு வதாகவும் கூறப் படுகிறது. புராணங்களில் திருப்பேர்நகர் என்று அழைக்கப்பட்டு வரும் இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு தினமும் அப்பம் செய்து நைவேத்தியம் செய்யப்பட்டு வருகிறது. கோவிலடி பெருமாளுக்கு திருமண தடை உள்ளவர்கள்இரண்டு துளசி மாலையை கொண்டு வந்து பெருமாளுக்கு சாத்தி வழிபட்டு ஒரு மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். அப்பக்குடத்தான் சேவடி யில் பூமிதேவி தவம் செய்து கொண்டிருப்பதால் நிலம் தொடர்பாக தீராத பிரச்சினைகள் உள்ள வர்கள் கோவிலடிக்கு வந்து பூஜை செய்து வழிபட்டால் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை. நோய் வாய்ப்பட்டவர்கள் மூன்று சனிக்கிழமைகள் கோவிலடி பெருமாள் கோவிலுக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட உடல் நலம் பெறுவார்கள். தங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நிலை காரணமாக நிதி நெருக்கடி மற்றும் கணவன்- மனைவி களுக்கிடையே மன மாச்சர்யம் உள்ள தம்பதிகள் வெள்ளிக் கிழமைகளிலும். திருவோண நட்சத்திர நாளிலும் கோவிலடிக்கு வந்து பெருமாள் மற்றும் தாயார் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட தோஷம் நீங்கி ஏற்றம் பெறுவார்கள். இத்திருக் கோவிலில் குழந்தை பேறு இல்லாத தம்பதியர் சந்தான கோபால கிருஷ்ணனுக்கு வளர்பிறை நாட்களில் கற்கண்டு நைவேத்யம் செய்து 10 குழந்தைகளுக்கு வழங்கி விட்டு தாங்களும் சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும்.

சிறப்பு அம்சங்கள்

கட்டுமலை போல் மேடான இடத்தில் கோயில் அமைந்துள்ளது. படிகள் ஏறிசெல்ல வேண்டும். கோயிலை ஒட்டியே காவிரி பாய்கிறது. குளிக்க வசதியாக உள்ளது. விசாலமான வெளிபிராகாரம். ஆழ்வார் மண்டபம் உள்ளது. இங்கு ஆஞ்சநேயருக்கும் பிள்ளையாருக்கும் தனிசந்நிதிகள் இருக்கின்றன.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரத்தில் தேர், தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, கிருஷ்ணனுக்கு உறியடி உற்சவம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top