சிவநந்திபுரம் சிவன்கோயில்
முகவரி
சிவநந்திபுரம் சிவன்கோயில், சிவநந்திபுரம், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம்-607 004.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், சிவநந்திபுரம் சிவன்கோயில் கடலூரின் மேற்கில் 30 கிமி தூரத்தில் அமைந்துள்ள குறிஞ்சிப்பாடியின் வடக்கில் 7 கிமி தூரத்தில் உள்ள வேங்கடாம்பேட்டையினை தாண்டி அரை கிமி-ல் சிறிய சாலை கிழக்கு நோக்கி செல்கிறது அதில் சென்றால் சிவநந்திபுரம் அடையலாம். இங்கு உள்ள முத்து மாரியம்மன் கோயிலின் தெற்கில் ஒரு அரசமரத்தின் கீழ் இறைவன் அமர்ந்துள்ளார் லிங்க வடிவில் ஒரு பெரிய சிமென்ட் மேடையில் அழகாக நேர்த்தியாக செய்யப்பட லிங்கமூர்த்தி. கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். எதிரில் சிறிய நந்தி உள்ளது. வானமே கூரை, மண்ணே அதிட்டானம், மழைநீரே அபிஷேகம், ஓரறிவு குடைபிடிக்க, தென்றலே பட்டாடை, சூரியனும் சந்திரனும் போட்டி போட்டு விளக்கேற்ற, அரசிலைகளே அர்ச்சனை, தேனீக்களின் சுதிக்கேற்ப குயில்கள் பதிகம் பாட அதற்க்கு மயில்களே அபிநயம் பிடிக்கின்றன, அவ்வப்போது ஆறறிவுடையோர் வணங்கி செல்கின்றனர். வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேங்கடாம்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி