Thursday Dec 19, 2024

சிதம்பரம் இளமையாக்கினார் திருக்கோயில், கடலூர்

முகவரி :

சிதம்பரம் இளமையாக்கினார் திருக்கோயில், கடலூர்

இளமையாக்கினார் கோயில் தெரு, சிதம்பரம்

கடலூர் மாவட்டம் – 608 001

தொலைபேசி: +91 4144 220 500

மொபைல்: +91 94426 12650

இறைவன்:

திருப்புலீஸ்வரர் / யுவனேஸ்வரர் / இளமையாக்கினார்

இறைவி:

அம்மன்: திருபுரசுந்தரி / பாலசுந்தரி / யுவனம்பாள் / இளமை நாயகி

அறிமுகம்:

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தாலுகாவில் உள்ள சிதம்பரம் நகரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இளமையக்கிணர் கோயில் உள்ளது. மூலவர் திருப்புலீஸ்வரர் / யுவனேஸ்வரர் / இளமையாக்கினர் என்றும், தாயார் திருபுரசுந்தரி / பாலசுந்தரி / யுவனம்பாள் / இளமை நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் திருநீலகண்ட நாயனாரின் முக்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. இக்கோயில் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் தில்லை நடராஜர் கோவிலுக்கு மேற்கே 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

 சிவபெருமானின் நாட்டிய தரிசனம் காண விரும்பிய வியாக்ரபாதர், சிதம்பரம் வந்தார். இங்கிருந்த தீர்த்தக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டைசெய்து, பர்ணசாலை அமைத்து தவமிருந்தார். வியாக்ரபாதர், சிவனருளால் புலிக்கால் பெற்ற முனிவராவார். இவர் பூஜித்ததால் சிவனுக்கு “திருப்புலீஸ்வரர்’ என்றும், சிதம்பரத்திற்கு “திருப்புலீஸ்வரம்’ என்றும் பெயர் ஏற்பட்டது.

இளமை தரும் சிவன்:

திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். இவ்வூரில் மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி “என்னை இனி தொடக்கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை!’ என்றாள். சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார்.

இவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். “இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக்கொள்கிறேன்!’ என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டை கேட்டார். நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது, காணவில்லை. வருந்திய பக்தர் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் சிவன் ஒப்புக்கொள்ளவில்லை.

 மனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி “திருவோடு தொலைந்துவிட்டது!’ என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார். அப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தின் அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக பதவி கொடுத்தார். இதனால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார்.

நம்பிக்கைகள்:

பிரச்சனையால் பிரிந்துள்ள தம்பதியர், தங்களுக்குள் கருத்து ஒற்றுமை இல்லாதோரும், ஒற்றுமையாக இருக்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்:

பக்தியில் ஒளி பெற்றவர்: பக்தர் ஒருவர் ஒவ்வொரு சிவன் கோயில்களுக்கும் சென்று, விளக்கேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக சிவன், வறுமையை உண்டாக்கினார். தன் சொத்துக்களை விற்றும் தன் பணியைத் தொடர்ந்தவர், ஒரு கட்டத்தில் திரி வாங்கவும், வழியில்லாமல் கணம்புல்லை திரியாக்கி, இத்தலத்தில் தீபமேற்றி சிவனை வழிபட்டார். இதனால் இவருக்கு “கணம்புல்லர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவரது பக்தியை மெச்சிய சிவன், நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தையும் கொடுத்தார். திருக்கார்த்திகையன்று இவரது குருபூஜை நடக்கும்.


தம்பதியர் தலம்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மேற்கு திசையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே இளமை தீர்த்தம் உள்ளது. தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் விசேஷமாக நடக்கும். சிவன் சன்னதி எதிரே நந்திக்கு அருகில் வியாக்ரபாதர் நின்று வணங்கியபடி இருக்கிறார். தவிர பிரகாரத்திலும் இவருக்கு சன்னதி உள்ளது. தைப்பூசத்தன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும். அன்று இவர் இளமை தீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். பிரகாரத்தில் மனைவி ரத்னாசலையுடன் திருநீலகண்டர், கணம்புல்ல நாயனார் சன்னதிகள் உள்ளன. விசாகம் நட்சத்திர நாட்களில் திருநீலகண்டருக்கும், கிருத்திகையன்று கணம்புல்லருக்கும் விசேஷ திருமஞ்சனம் உண்டு. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ ஹோமத்துடன் பூஜை நடக்கும்.

திருவிழாக்கள்:

                                                நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி, திருக்கார்த்திகை

காலம்

12 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top