சாலியமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
முகவரி :
சாலியமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோயில்,
சாலியமங்கலம், பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613504.
இறைவன்:
சிதம்பரேஸ்வரர்
இறைவி:
சிவகாமசுந்தரி
அறிமுகம்:
தஞ்சையில் இருந்து அம்மாபேட்டை சாலையில் பதினைந்து கிமீ சென்றால் சாலியமங்கலம் உள்ளது. ஊரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. கிழக்கு பகுதியில் ஒன்றும் வடகிழக்கில் ஒரு சிவன் கோயிலும் உள்ளன. வடகிழக்கில் உள்ளது சிதம்பரேஸ்வரர் கோயில் ஆகும். ஊரினை சுற்றி செல்லும் புறவழிச்சாலையை ஒட்டி இக்கோயில் அமைந்துள்ளது. ஊரின் வடகிழக்கில் ஒரு பெரிய குளம் ஒன்றுள்ளது. அதன் கரையில் அமைந்துள்ளது இக்கோயில். இறைவன்-சிதம்பரேஸ்வரர் இறைவி-சிவகாமசுந்தரி.
கிழக்கு நோக்கிய கோயில் இருந்த போதிலும் தென்புறம் ஒரு சிறிய வாயிலே பிரதானமாக உள்ளது. அதன் மேல் சுதை வடிவங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் தான் கோயில் குடமுழுக்கு கண்டிருக்கிறது. பளீரென்ற வண்ணம் கோயில் முழுமையும் வெளிச்சமூட்டுகிறது. எளிமையாக இரண்டே வண்ணங்களில் பணிகள் முடிந்துவிட்டன. கிராமகோயில் திருப்பணிகள் செய்வோர் இதனை பின்பற்றலாம். இவர்கள் செப்பு கலசங்கள் கூட வைக்காமல் ஒரு குத்தீட்டி போன்ற ஒரு தண்டினை வைத்துள்ளது சற்றே வியப்பூட்டுகிறது. இறைவன் சிதம்பரேசர் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் கோயில் கொண்டுள்ளனர்.
இறைவனின் முன்னர் உள்ள முகப்பு மண்டபம் தாண்டி ஒரு சிறிய மண்டபத்தில் நந்தி உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகனும் துர்கையும் மட்டும் உள்ளனர். தென்முகனின் எதிரில் நால்வருக்கு ஒரு மாடம் உள்ளது. விநாயகர் சுப்பிரமணியர் மகாலட்சுமி மூவருக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. விநாயகரை ஒட்டி பெரிய வில்வமரம் உள்ளது. சுப்ரமணியருக்கும் லட்சுமிக்கும் இடையில் உள்ள பகுதியில் மாரியம்மன், மற்றும் தர்மசாஸ்தா வைக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்கில் நவகிரகம் பைரவர் சூரியன் ஒரு பெரிய மாடத்தில் உள்ளார்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாலியமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சாலியமங்கலம், பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி