கோர்வாங்லா புச்சேஸ்வரர் கோவில், கர்நாடகா
முகவரி
கோர்வாங்லா புச்சேஸ்வரர் கோவில் கோர்வாங்லா, கர்நாடகா – 573118
இறைவன்
இறைவன்: புச்சேஸ்வரர்
அறிமுகம்
புச்சேஸ்வரர் கோயில், இந்திய மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் கோர்வாங்லா கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கர்நாடகாவில் அதிகம் அறியப்படாத ஹொய்சலா கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவில் இந்திய தொல்பொருள் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களாக பாதுகாக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
பொ.ச.1173-இல் ஹொய்சலா மன்னர் முதலாம் நரசிம்மனின் அதிகாரியான புச்சிஇராஜா என்பவரால் இந்த கோவில் கட்டப்பட்டது, ஹொய்சலா மன்னர் இரண்டாம் வீர பல்லாலாவின் முடிசூட்டு விழாவைக் கொண்டாட கட்டப்பட்டது. கோவிந்தேஸ்வரர் மற்றும் நாகேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வேறு இரண்டு கோவில்கள் புச்சேஸ்வரர் கோவிலுக்கு அருகில் உள்ளன. இந்த கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன மற்றும் புச்சிராஜாவின் மூத்த சகோதரர்களான கோவிந்தா மற்றும் நாகாவால் கட்டப்பட்டது. புச்சேஸ்வரர் கோவில், திவிகூடாச்சல பாணியில் கட்டப்பட்டுள்ளது, இக்கோயில் கருவறை, சுகநாசி, நவரங்கம் மற்றும் முக மண்டபத்தைக் கொண்டுள்ளது. முகமண்டபத்தில் வடக்கு மற்றும் தெற்கு பக்கத்தில் நுழைவாயில்கள் உள்ளன. தெற்கு நுழைவாயில் மற்றும் வடக்கு நுழைவாயிலில் துவாரபாலர்கள் சிற்பங்கள் உள்ளன. முக மண்டபம் 32 தூண்களால் ஆதரிக்கப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஹாசன்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹாசன்
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூர்