கொற்கை பிரம்மஞானபுரீஸ்வரர் சிவன்கோயில்
முகவரி
கொற்கை சிவன்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம்
இறைவன்
இறைவன்- பிரம்மஞானபுரீஸ்வரர் இறைவி- புஷ்பாம்பிகை
அறிமுகம்
கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில் உள்ள மருதாநல்லூரில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு -மூன்று கிமி சென்றால் கொற்கை-யை அடையலாம். மிக பழமையான சோழர் கால கோயில் அர்த்தமண்டபம் , மக மண்டபம்,முக மண்டபம் என நீண்ட மண்டபங்களுடன் உள்ளது. பிற்கால சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டகோயில், அப்போது ஏழு பிரகாரங்களுடன் ஊரே கோயிலாக இருந்தது இன்று பொலிவிழந்து ஒரு பிரகாரம் கூட சரியான நிலையில் இல்லாமல் உள்ளது. கோரக்க சித்தர் வழிபட்டு தமது குறுகிய கைகள் சரிவரப்பெற்றதால் கோரக்கர்கை எனப்பட்டு கொற்கை என மாறியதாக ஒரு கதை உள்ளது. ஒரு சமயம் பிரம்மன் படைப்பு தொழிலை சரிவர செய்ய இயலாமல் மனக்குழப்பம் அடைந்தான். அதனால் பிரம்மனுக்கு ஞான உபதேசம் செய்து வைத்த தலம் இதுவாகும். அதனால் இறைவன் பிரம்மஞானபுரீஸ்வரர். முகமண்டபத்தில் சோழமன்னர் ஒருவர் கூப்பிய கரங்களுடன் உள்ளதை காணலாம், கருவறை வாயில் இடப்புறம் விநாயகர். பின் மாடத்தில் அதிகார நந்திகேஸ்வரர் சிலை உள்ளது. வலப்புறம் முருகன் வள்ளி தெய்வானையுடன், பின் மாடத்தில் கிராத மூர்த்தி வில்லுடன் உள்ளார் வெளியில் நந்தி மண்டபம் உள்ளது. இங்கு இறைவனை நோக்கி ஒரு நந்தியும் அம்பிகையை நோக்கி ஒரு நந்தியும் உள்ளது சிறப்பு. அம்பிகை திருக்கோயில் தனியாக தெற்கு நோக்கி உள்ளது. கருவறை கோட்டத்தில் நர்த்தன விநாயகர் தென்முகன் அர்த்தநாரி துர்க்கை பைரவர் போன்ற சிற்பங்கள் மிக அழகான வேலைப்பாடுகள் கொண்டவை. திருப்பணிகள் நடந்து வருகின்றன. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாக்கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி