குருவாடி சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
குருவாடி சிவன்கோயில், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609702.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சன்னாநல்லூரில் இருந்து திருமருகல் செல்லும் முடிகொண்டான் ஆற்றங்கரை சாலையில் ஒன்பது கிமீ. தூரம் சென்றால் போலகம் பிரிவு சாலை உள்ளது அதனை தாண்டி அரை கிமீ. தூரத்தில் உள்ளது குருவாடி இங்கு ஆற்றின் உட்புறம் படுகையில் ஒரு சிவாலயம் இருந்ததாகவும் அது பல காலம் முன்னரே வெள்ளத்தில் சிதைந்துவிட அதில் பிற சிலைகள் ஆற்றுடன் போய்விட கிடைத்த ஒரு லிங்கத்திற்கு மட்டும் தற்போது சாலையோரம் சிறிய கொட்டகை அமைத்து உள்ளூர் மக்கள் வழிபடுகின்றனர். அருகில் ஒரு மாரியம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. உயர்ந்த பாணம் கொண்டு விளங்குகிறது லிங்கம். எதிரில் ஒரு சிறிய நந்தி ஒன்றை செய்து வைத்துள்ளனர். கோடிக்கணக்கான அண்டங்கள், அதில் நம்முடைய பூமி பந்தினை போல் எண்ணிலடங்கா கோள்கள் அதில் நாம் காணும் கோயில்களும் மூர்த்திகளும் கை மண்ணளவே, நித்தம் ஒரு அருவுருவ மூர்த்தியை கண்டு வணங்குங்கள். பிறவி எனும் பெருங்கடலை நீந்துங்கள். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குருவாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி