குமாரபுரம் குருபரமேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
குமாரபுரம் குருபரமேஸ்வரர் சிவன்கோயில்,
குமாரபுரம், கடலூர் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607109.
இறைவன்:
குருபரமேஸ்வரர்
அறிமுகம்:
கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது தான் இந்த குமாரபுரம். கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது. நேர் எதிரில் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி. இங்கு நெடுஞ்சாலையோரமாகவே ஒரு சிவாலயம் உள்ளது. கிழக்கு நோக்கியது. பல ஆண்டுகளாகவே ஒரு பெரிய அரச மரத்தின் கீழ் இருந்து வந்த லிங்கமூர்த்தி தற்போது அழகிய கோயில் ஒன்றை கொண்டுள்ளார். இறைவன் பெரிய அளவிலான வடிவினர். கம்பீரமாக கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், எதிரில் நீண்ட அழகிய மண்டபம். அதில் நந்தி பலிபீடங்கள் உள்ளன. கருவறை வாயிலில் இரு துவாரபாலகர்கள் உள்ளனர். இறைவன் – குருபரமேஸ்வரர் என்பதாகும், இக்கோயிலை ஒட்டி பெரிய அரச மரம் ஒன்று தழைத்து நிற்கிறது. அதனடியில் ஒரு விநாயகரும் இரு நாகர்களும் மாடங்களில் உள்ளனர். அக்காலத்தில் வழிபாட்டில் இருந்த சில கருங்கல் கழுமரங்களும் உள்ளன. வடகிழக்கு பகுதியில் ஒரு அழகிய மண்டபத்தில் நவகிரகங்கள் உள்ளன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குமாரபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி