Sunday Oct 27, 2024

ஒரே சாபத்தால் 300 ஆண்டுகளாக சாய்ந்திருக்கும் சிவன் கோவில்.. அப்படி என்ன சாபம் அது..?

இந்தியாவில் உள்ள வாரணாசி நகரத்திற்கு  ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கா நதியையும் அதன் கரையில் உள்ள கோவில்களையும் தரிசிக்க வருகிறார்கள். ஆனால் ரத்னேஷ்வர் என்ற  கோயில் மற்ற எல்லா கோவில்களை  வேறுபட்டு நிற்கிறது. உலக புகழ்பெற்ற சாய்ந்த கோபுரத்தை பற்றி கேட்டிருப்போம். அது சுமார் 4 டிகிரி சாய்ந்து காணப்படுகிறது. ஆனால் வாரணாசியில் உள்ள இந்த கோவில் சுமார் 9  சரிந்துள்ளது. மேலும் இது ஆண்டுதோறும் மேலும் சாய்ந்து வருவதாக கூறுகின்றனர். இப்படி இந்த கோவில் செய்வதற்கு ஒரு சாபம் தான் காரணமாம். 

வாரணாசியில் மணிகர்ணிகா காட் மற்றும் சிந்தியா காட் இடையே ரத்னேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் உயரம் 74 மீட்டர், இது பைசா சாய்ந்த கோபுரத்தை விட 20 மீட்டர் அதிகம். ஆனால் இதைப் பற்றி நம் ஊர் மக்களுக்கே அதிகம் தெரிவதில்லை.

இந்த கோவில் சாய்ந்ததற்கு 2 கதைகள் சொல்லப்படுகின்றன.ராணி அஹில்யாபாய் ஹோல்கர் வாரணாசியில் கோயில்களைக் கட்டும் போது, ​​அந்த நேரத்தில் அவரது பணிப்பெண்களில் ஒருவரான ரத்னாபாயும் கோயில் கட்டுவதற்கு கடன் கொடுத்துள்ளார். பெரிய பங்கை கொடுத்த அந்த பணிப்பெண்ணின் பெயரான ரத்னா என்ற பெயரே கோவிலுக்கு வைத்ததை கேட்ட அஹில்யா  இந்த கோவிலுக்கு சாபம் கொடுத்ததால் தான் நீரில் ஒரு பக்கம் மூழ்கியதாக சொல்கிறார்கள். மற்றொரு கதை படி, ராஜா மான்சிங்கின் வேலைக்காரரால் அவரது தாயார் ரத்னா பாய்க்காக கட்டப்பட்டது இந்த கோவில் என்று கூறப்படுகிறது. கோயில் கட்டப்பட்ட பிறகு, அம்மாவின் கடனை அடைத்துவிட்டதாக பெருமையுடன் அறிவித்தார். இந்த வார்த்தைகள் அவன் உதடுகளிலிருந்து வெளிப்பட்டவுடன், அன்னையின் கடனை ஒருபோதும் அடைக்க முடியாது என்பதைக் காட்ட கோயில் பின்னால் சாய்ந்தது என்று கூறுகின்றனர்

ஆனால் அறிவியல் படி, நதியின் கரையில் கட்டப்பட்ட இந்த கோவிலின் நிலப்பரப்பு ஸ்திரத்தன்மை குறைந்த இடம். நீரோடும் பாதையால் நில அரிப்பு ஏற்பட்டு தளம் பலவீனம் அடைவதால்  நாளடைவில் இக்கோயில் ஒரு பக்கம் சாய்ந்து வருகிறது. மேலும் இது வருடத்தின் பாதி நாள் நதியில் மூழ்கி விடுகிறது.

ஒரு சில நாள் இதன் கோபுர உச்சி வரை கூட தண்ணீர் இருக்கிறது. இதனால் இந்த கோவிலுக்கு வருடத்தின் சில நாட்கள் மட்டுமே பூஜை, வழிபாடு எல்லாம் செய்யப்படுகிறது. கோயிலின் கருவறையில் ஒன்றல்ல பல சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனாலேயே இது சிவனின் சிறிய நீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது. கோவிலே ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதால் இந்த கோயிலின் கருவறையில் யாரும் நேராக நிற்க முடியாது. சாய்ந்து பேலன்ஸ் பண்ணி  தான் வழிபாடு செய்யவேண்டும். 1860 களில் எடுக்கப்பட்ட இந்த கோவிலின் படங்களில் மட்டுமே இவை நேராக இருப்பதைக் காணமுடியும்.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top