எச்சூர் காசி விசாலாட்சி சமதே காசி விஸ்வநாதர் திருக்கோயில், செங்கல்பட்டு
முகவரி :
எச்சூர் காசி விசாலாட்சி சமதே காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
எச்சூர்,
செங்கல்பட்டு மாவட்டம் – 603109.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் மாமல்லபுரம் செல்லும் சாலையில் எச்சூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் காசி விசாலாட்சி சமதே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் 10 நிமிட நடை தூரத்தில் கோயில் உள்ளது பேருந்து மற்றும் ஆட்டோ வசதியும் உண்டு
புராண முக்கியத்துவம் :
முற்காலத்தில் சித்தர் ஒருவருக்கு இறைவன் காசியில் இருப்பது போன்றே காட்சி தந்தருளிய தலமாக கூறப்படுகிறது. இத்தலத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் ஆலயம் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்துள்ளது. காலப்போக்கில் ஆலயம் சிதைத்து இறைவனும் மண்ணிற்க்குள் தன்னை மறைத்துக் கொண்டதில், மக்களும் மகேசனை மறந்து போனார்கள். சில வருடங்களுக்கு முன்பு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய இறைவன் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை கனவில் ஒளிப்பிழம்பாக தோன்றி அவனை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று காட்டினார்.
மறுநாள் அந்தச் சிறுவன் தான் கண்ட கனவு குறித்து பெற்றோரிடம் சொல்ல அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் சில தினங்கள் கழித்து மீண்டும் அச்சிறுவனுக்கு அதே கனவு வந்தது. இந்த முறை பெற்றோரிடம் அவன் சொல்ல அவர்கள் கனவை பற்றி பொதுமக்களிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டவர்கள் அநேகமாக புதையல் இருக்கப்போகிறது என்று நினைத்து குறிப்பிட்ட இடத்தை தோண்ட ஆரம்பித்தார்கள். பொன் புதையலை எதிர்பார்த்த அவர்களுக்கு சிவபெருமான் லிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டு அவர்கள் வெளியில் எடுத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபடத் தொடங்கினார்கள். படிப்படியாக வளர்ச்சி பெற்று 2017-ல் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். தற்செயலாக ஈசன் தமது முந்தைய பெயரான காசி விஸ்வநாதர் என்ற பெயரிலேயே வழங்கப்பட்டால் அதை தொடர்ந்து காசி விசாலாட்சி அம்பாள் தனி சன்னதி 2021-ல் இல் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.
நம்பிக்கைகள்:
இவரை வழிபடுவோருக்கு திருமண பாக்கியம் குழந்தைப்பேறு கிடைக்கிறது கடன் தொல்லை கஷ்டங்கள் நீங்கிச் இடங்களில் இருக்கிறது
சிறப்பு அம்சங்கள்:
கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்போடு கோயில் திகழ்கிறது. வெளியில் பலிபீடமும், நந்தியும்பெருமானும் அமைந்துள்ளார்கள். இருபுறமும் விநாயகரும், முருகனும் காட்சி தருகிறார்கள். அர்த்தமண்டபத்தில் மற்றுமொரு நந்தி உள்ளார். கருவறை முன் மண்டபத்தில் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் லிங்கத் திருமேனியாக உயரமான பீடத்தில் காசி விஸ்வநாதர் என்ற திருநாமம் தாங்கி கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை இருக்கின்றனர். வெளிச்சுற்றில் திறந்தவெளியில் லிங்கமும் எதிரே நந்தியம் பெருமான் காட்சி அளிக்கிறார்கள். சண்டிகேசுவரர் வழக்கமான இடத்தில் எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் பைரவர் இருக்கிறார். தெற்கு நோக்கிய சன்னதியில் காசி விசாலாட்சி என்ற திருப்பெயருடன் நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சன்னதிக்கு வெளியே துவாரபாலகர்கள் உள்ளனர்.
திருவிழாக்கள்:
தினமும் காலை ஒரு வேளை பூஜை மட்டும் நடைபெறும் இத்தலத்தில் பிரதோஷம், மகா சிவராத்திரி உள்பட சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எச்சூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை