உக்கரை விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
உக்கரை விஸ்வநாதர் சிவன்கோயில்,
உக்கரை, திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612504.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
அணைக்கரை – திருப்பனந்தாள் இடையிலுள்ள தத்துவான்சேரியில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் உக்கரை அடையலாம். கொள்ளிடம் சோழநாட்டுக்கு ஓர அரணாக இருந்து வந்துள்ளது, அதன் கரையோர கிராமங்கள் அனைத்துமே ஓர் காவல் நிமித்தமான கிராமமாகவே இருக்கும். இந்த உக்கரை என்பது உட்கரைகாவல் என்பதின் சுருக்கமே. ஊரின் மையத்தில் கிழக்கு நோக்கிய சிறிய சிவாலயம் உள்ளது திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான கோயில். பெரிய ஒற்றை கருவறை கொண்டுள்ளது. அதில் இறைவன் விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும், இறைவி விசாலாட்சி கருவறையின் உட்புறம் தெற்கு நோக்கியும் உள்ளார்கள். அருகில் சூரியன் சிலை ஒன்றும் விநாயகர் சிலை ஒன்றும் உள்ளன. வெளியில் சிறிய மண்டபத்தில் நந்தி உள்ளார். மடத்தின் சார்பில் பூஜைகள் அவ்வப்போது வந்து செய்துவிட்டு போகின்றார்கள் இறைவனும் இறைவியும் மிக்க அழகான வேலைப்பாடமைந்த சிலைகளாக உள்ளனர். ஆம், வழிபடுவார் யாருமின்றிபோக தெய்வங்களும் சிலைகள் என்றே அழைக்கப்படும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உக்கரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி