ஈஞ்சார் சிவன் திருக்கோயில், சிவகாசி
முகவரி
ஈஞ்சார் சிவன் திருக்கோயில், ஈஞ்சார் கிராமம், சிவகாசி வட்டம் விருதுநகர் மாவட்டம் – – 626 124.
இறைவன்
இறைவன் : சிவன் இறைவி : மீனாட்சி அம்மன்
அறிமுகம்
சிவகாசி ஈஞ்சார் பகுதியில் கி.பி., 1236 ல் பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டிய மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. மூலவராக சிவனும், சக்தியாக மீனாட்சி அம்மனும், விநாயகர், முருகன், அய்யனார் போன்ற 18 சுவாமி சிலைகள் இருந்துள்ளது. ஆனால் இப்பொழுது எந்த சிலைகளும் இல்லை. கோயிலை சுத்தி கலை நயமிக்க கல்வெட்டுகள், சித்திரங்கள், அழகோவிய சிலைகள் மட்டுமே இருக்கின்றன. திறந்த வெளியில் நந்திபகவான் இருக்கிறார். கோயிலோ எந்த வித பராமரிப்பும் இல்லாமல் கேட்பாரற்று இருக்கிறது. சுற்றியும் புதர்மண்டியும் , கோவில் மேல் முழுவதும் மரங்களால் சிதலமடைந்து இருக்கிறது. சிலைகள் அனைத்தும் துாசி படிஞ்சு பாழ்பட்டு வருகிறது. கோயில் மூலவர் சன்னதி கீழ் பாதாள சுரங்கம் உள்ளது என்றும், இது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவி ஆண்டாள் கோயில் செல்ல வழியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இங்க இருக்குற சுவாமி சிலைகள் அனைத்தும் திருடப்பட்டுவிட்டது. கோவில் மூலவர் சிலைய 2017 -ல் திருடினார்கள். நந்தி சிலைய திருடும் போது ஊர்மக்கள் பார்த்து விரட்டி விட்டார்கள். இந்த கோயிலை சுற்றி தோட்டம், ரதவீதிகள், தாமரைக்குளம் என்று சொல்லுகின்ற அளவுக்கு பெரிய நகரம் இருந்திருக்க வேண்டும். இப்பொழுது வெறும் சிதலமடைந்த நிலையில் கோயில் மட்டுமே காணப்படுகிறது.. மன்னர், போர் காலத்துல சுரங்கம் வழியாக தப்பிக்கவும், மறைந்து வாழும் இடமாவும், பொன், பொருளை பாதுகாக்கும் இருப்பிடமாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனா இங்கையும் சில சமூக விரோத செயல்கள் நடக்குது ( கோவில் சுற்றி மதுப்பாட்டில் உள்ளது ).
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிவகாசி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிவகாசி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை