Friday Nov 22, 2024

ஆலப்புழா பள்ளிப்புரம் மலையாள மகாலட்சுமி கடவில் மகாலட்சுமி) திருக்கோயில், கேரளா

முகவரி

அருள்மிகு மலையாள மகாலட்சுமி (கடவில் மகாலட்சுமி) திருக்கோயில், பள்ளிப்புரம், ஆலப்புழா மாவட்டம் , கேரளா மாநிலம் – 678 006. போன்: +91 478-255 2805; 094464 93183

இறைவன்

இறைவி: மகாலட்சுமி

அறிமுகம்

அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோவில் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாக இருக்கிறது இந்த மலையாள மகாலட்சுமி கோவில். இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாலட்சுமி தாயார் இருக்கிறார். தாயாரை கடவில் மகாலட்சுமி என்றழைக்கின்றனர். கேரளாவில் மகாலட்சுமிக்கென்று அமைந்திருக்கும் தனி கோவில் இது தான். லட்சுமி தாயார் இங்கு கிழக்கு திசையை நோக்கி சூரிய நாராயணனை பார்த்தவாறு நின்றிருக்கிறாள். கோவில் சுற்று பிரகாரங்களில் கணபதி, ஐயப்பன், சிவன், கொடுங்காளி, ஷேத்திர பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.

புராண முக்கியத்துவம்

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பகுதியில் நெசவுத்தொழில் செய்து வாழ்ந்து வந்த மக்கள் பிழைப்புக்காக சேர்த்தலா பகுதிக்கு வருகிறார்கள். இவர்கள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காலத்தில் மகாலட்சுமிக்கென தனிகோயில் கட்டி வழிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பின் இவர்கள் கேரளா வந்தவுடன் இங்கும் மகாலட்சுமியை தொடர்ந்து வழிபட விரும்புகிறார்கள். இவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற மகாலட்சுமி இங்கு அருள்பாலிக்கிறாள். இவள் காஞ்சிபுரத்திலிருந்து முதலை மூலமாக இத்தலத்திற்கு வந்துள்ளாள் என புராணம் கூறுகிறது.மகாலட்சுமி வந்து இறங்கிய இடத்தை இன்றும் பராமரித்து வருகிறார்கள். இந்த இடம் மிகப்பெரும் ஏரிக்கு அருகில் உள்ளது. ஏரியில் உள்ள நீர் உப்பாக இருக்கும். ஆனால் மகாலட்சுமி வந்து இறங்கிய இடம் மட்டும் சுவையான குடிநீராக உள்ளது.ஆரம்ப காலத்தில் இந்த முதலைக்கு உணவு கொடுத்து கோயில் அருகிலேயே வழிபட்டு வந்தார்கள். அதன் பின் கல்லால் முதலையின் சிலையை வடித்து கோயில் கர்ப்பகிரகத்தின் அருகில் வைத்து விட்டார்கள்.

நம்பிக்கைகள்

சூரிய உதயத்தின் போது மகாலட்சுமி வந்திறங்கியதாக கருதப்படும் பகுதியில் இருக்கும் நீரை அருந்தி விட்டு, முகம், கை கால்களை கழுவிக்கொண்டு மகாலட்சுமியை நாராயணனுடன் தரிசித்தால் நீண்ட நாட்களாக திருமண தடை, தாமதங்கள் ஏற்பட்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு உண்டாகும்.

சிறப்பு அம்சங்கள்

ஆயிரம் வருடம் பழமையான இங்கு அம்மன் “கடவில் ஸ்ரீ மகாலட்சுமி’ என அழைக்கப்படுகிறாள். இவள் அஷ்ட ஐஸ்வரியங்களையும் கொடுக்கும் மகா சக்தியாக முன் கைகளில் நெல்கதிர், கிளியும், பின் கைகளில் சங்கு சக்கரமும் வைத்து அருள்பாலிக் கிறாள். கேரளாவில் மகாலட்சுமிக்கு என அமைந்திருக்கும் தனி கோயில் இதுதான். அம்மன் கிழக்கு திசையில் சூரிய நாராயணனை பார்த்துள்ளாள். சூரிய உதயத்தின் போது மகாலட்சுமி வந்து இறங்கிய குளத்தில் உள்ள நீரை அருந்தி விட்டு, முகம் கை கால்களை கழுவி மகாலட்சுமியை தரிசித்தால் நாராயணனையும் சேர்த்து தம்பதி சமேதராக தரிசித்த பலன் கிட்டும். திருமணத்தடையும் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

புரட்டாசியில் நவராத்திரி, மார்கழியில் 12 நாள் “களபபூஜை’, தை மகரசங்கராந்தி, தை புனர்பூச நட்சத்திரத்தில் பிரதிஷ்டை தின விழா, மாசி மகாசிவராத்திரி மற்றும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

கேரளா தேவஸ்தானம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பள்ளிப்புரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேர்த்தலா

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top