அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி
முகவரி
அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி – 630 215 சிவகங்கை மாவட்டம்
இறைவன்
இறைவன்: வளரொளிநாதர் இறைவி: வடிவுடையம்மாள்
அறிமுகம்
தெட்சிணாமூர்த்தி ஏழிசைத்தூண் மண்டபத்தில் அமைந்துள்ளதும், சண்டிகேஸ்வரர் சன்னதி, ஒரேபாறையில் செய்யப்பட்ட குடைவரைக்கோயில் போன்ற அமைப்பில் உள்ளதும், குதிரையில் போருக்கு செல்லும் வீரன் ஒருவனது நிலையை தத்ரூபமாக செதுக்கியிருப்பதும் சிறப்பு. நந்தி தனிமண்டபத்தில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற அகந்தையுடன் இருந்தார்.ஒருமுறை பார்வதிதேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய மரியாதைகளை,பிரம்மனுக்கு செய்தார். பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார். பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து கூறினாள். எனவே,சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார்.
திருவிழாக்கள்
சம்பகசூர சஷ்டி, பிள்ளையார் நோன்பு
காலம்
2000-3000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
நகரத்தார்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வைரவன்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி