Sunday Jan 19, 2025

அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில்- தேனி

முகவரி

அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில்- மாவூற்று, தெப்பம்பட்டிட் (ஆண்டிபட்டிட் ) தேனி- 627851

இறைவன்

வேலப்பர் (முருகர்)

அறிமுகம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி- தெப்பம்பட்டி அருகேயுள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது ‘மாவூற்று வேலப்பர்’ ஆலயம். தற்போது வேலப்பர் குடிகொண்டிருக்கும் பகுதி முழுமையும், ஆதியில் மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொக்ண்டே இருக்கிறது. இவ்வாறு, மாமரத்தின் அடியில் ஊற்று பொங்கிக்கொண்டிருப்பதால் இப்பகுதி “மாவூற்று’ என்றும், இத்தல முருகன் “மாவூற்று வேலப்பர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலவிநாயகர் மாவூற்று விநாயகர் என்ற திருநாமத்தடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்யமாக சர்க்ர் க் ரைப்பொங்கல் படைத்துத் வழிபடுகின்றனர். தல விருட்சட்ம் : மாமரம் தீர்த்தம் : மாவூற்ற

புராண முக்கியத்துவம்

புத்திரதோஷம், திருமணத்தடை நீங்க, வியாபாரம், கல்வி, கேள்விகளில் சிறக்க, பிணிகள், பீடைகள் நீங்க வேண்டிக்கொக்ள்ளலாம். நினைத்த காரியம் நிறைவேற வேலப்பருக்கு பால், பஞ்சாமிர்தர்ம், இளநீரால் சிறப்பு அபிஷேகங்கள் செய்து, பால்குடம் மற்றும் காவடி எடுக்கப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதியாக உள்ள இப்பகுதியில் வசித்துத் வந்த பழியர் இனத்தவர்கர்ள் வள்ளிக்கிழங்கினை பயிரிட்டுட் அதனை தமது உணவாக உண்டுவந்தனர். ஒருமுறை, அவர்கர்ள் தற்போது கோயிலில் வேலப்பர் எழுந்தருளியுள்ள பகுதியில் முளைத்திருந்த வள்ளிக்கிழங்கினை தோண்டினர். அதிக ஆழத்திற்கு தோண்டியும் அக்கிழங்கினை எடுக்க முடியாமல் அதன் வேர் மட்டுட்ம் நீண்ட தூரம் சென்று கொண்டேயிருந்தது. தொடர்ந்ர்ந்து தோண்டிய அவர்கர்ள் வேரில் முடிவில் வேலப்பர் சுயம்புவாக வீற்றிருந்ததைக் கண்டனர். பின், அவர்கர்ள் இப்பகுதியை ஆண்ட கண்டமனூர் ஜமீன்தாரிடம் சுயம்புவாக வேலப்பர் இருந்ததைக்கூற, பிற்காலத்தில் இவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபாட்டிட்ற்கு கொண்டுவரப்பட்டட்து.

சிறப்பு அம்சங்கள்

எழில் பொங்கும் இயற்கை அன்னையின் மடியில் அமைந்துள்ள இந்த ஊற்றில் நீராடி வேலப்பரை மனமுருக வேண்டிக்கொக்ள்ள தீராத பிணிகளும், மனக்குறைகளும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலம் அமைந்துள்ள தெப்பம்பட்டிட்யில் பெரிய தெப்பம் ஒன்று உள்ளது. இத்தெத்ப்பத்திற்கும், இத்தலத்திற்கும் சுரங்கத்தொத்டர்புர்கள் இருப்பதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் எனும் முதுமொழிக்கேற்ப இம்மலைக்குன்றில், வேலப்பராக முருகன் வீற்றிருந்து பக்தர்கர்ளுக்கு அருள்புரிகிறார். குகைகள் நிறைந்துள்ள இம்மலையில் பல சித்தர்கர்ள், தவயோகிகள் இன்றும் தவம் புரிவதாக கோயிலுக்கு வரும் பக்தர்கர்ள் தெரிவிக்கின்றனர். வேலப்பர் அருள்பாலிக்கும் குன்றின் மீது மாவூற்று விநாயகர், சப்தமாதாக்கள், அடிவாரத்தில் சக்தி கருப்பணசாமி ஆகியோர் அமைந்திருந்தும் பக்தர்கர் ளுக்கு அருள்புரிகின்றனர்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தெப்பம்பட்டிட்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருமங்கலம்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top