அருள்மிகு நடுவெளி சிவன்கோயில், திருவிடைமருதூர்
முகவரி
அருள்மிகு நடுவெளி சிவன்கோயில், நடுவெளி , திருவிடைமருதூர் வட்டம் , தஞ்சை மாவட்டம் ,தமிழ்நாடு- 612106
இறைவன்
இறைவன்: நடுவெளி சிவன்
அறிமுகம்
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் நடுவெளி சிவன்கோயில் க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ள ஊர், கம்பனின் புரவலரான சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊரென்றும் மக்கள் பெருமை பேசும் ஊர் தான் கதிராமங்கலம். அதன் பழைய பெயர் கதிர்வேய்ந்தமங்கலம். இவ்வூரின் தென்புறம் விக்ரமன் ஆறு மற்றும் காவிரி ஆறு மற்றும் ஆகியவற்றுக்கு நடுவே அமைந்திருக்கும் ஊரின் பெயர் நடுவெளி. இப்போது அது மருவி நறுவெளி என்றாகி இருக்கிறது. இந்த ஊரின் மேற்கில் பாஸ்கரராஜபுரம் எனும் இடத்தில் காவிரி இரு பிரிவாக பிரிந்து விக்ரமசோழன் – காவிரி என இருகரம் விரிக்கின்ற இடமே இப்பகுதி. இந்த ஊரில் தான் கிழக்கு நோக்கி செல்லும் காவிரியாள் வடக்கு நோக்கி உத்திரவாகினியாக அரை கிமி தூரம் சென்று மீண்டும் குணக்குவாகினியாக திரும்பி செல்லும் சிறப்பு வாய்ந்த பகுதி அதனால் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறை மூர்த்திகள் தனிச்சிறப்பு கொண்டவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் இந்த ஊரின் பெருமை அறியாமல், ஊரின் நடுவே ஓர் பராமரிக்கப்படாத பழமையான சிவன் கோவில் இருக்கிறது. அரை ஏக்கர் பரப்புடைய கிழக்கு நோக்கிய திருக்கோயில். அலங்கார் வளைவுடன், நாற்புறமும் மதில் கொண்டு அழகாக செங்கல்லால் வடிவமமைக்கப்பட்டு உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், கருவறை முன்னம் இடைநாழி, அதற்க்கு முன்னர் மூன்று வளைவு வைத்து அழகாக கட்டப்பட்ட முகப்பு மண்டபம் என உள்ளது. இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். பிரகாரத்தில் விநாயகர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார். கோயில் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நின்று போயுள்ளது. கோயிலில் இருந்த இறை மூர்த்திகள் அனைத்தும் வெளியில் ஒரு தகர கொட்டகை போடப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. சிவனை அடைவற்கு எளிமையான வழி உளது, பூவும், நீருமே சாதனங்களாகும். அவை எவ்விடத்தும் எளிதிற் கிடைப்பனவே. அவை சாதனங்களாதல் எவ்வாறு எனின், இறைவன் மேல் நீரைச் சொரிந்து பூவைச் சார்த்தினால் போதும், அதைக் கண்டவுடனே சிவன் அதனைச் செய்தவர்க்கு அருள்புரிகின்றான்., இதனைச் கூட செய்யாது உண்ணுதல், உறங்குதல், உண்டதை கழித்தல், கடைக்கண் வாரா உலகியல் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அதனை வாங்கி குவித்து விட்டு வெறும்கையுடன் மேலுலகம் செல்லும் மாந்தரே சிந்தியுங்கள் பழுதடைந்த கோயில் திருப்பணிக்கு ஒற்றை செங்கல் கொடுப்பீர்.. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சையூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி