Thursday Jan 23, 2025

அருள்மிகு திருகாமேஸ்வரன் சிவன் கோயில், போத்திராமங்கலம்

முகவரி

அருள்மிகு திருகாமேஸ்வரன் சிவன் கோயில், போத்திராமங்கலம் , கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம்

இறைவன்

இறைவன்- திருகாமேஸ்வரன் இறைவி- ஆரா அமுதம் (சிலை இல்லை)

அறிமுகம்

பெண்ணாடத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் வழியில் உள்ளது போத்திராமங்கலம் ஊரின் மத்தியில் பெரிய சுற்றுசுவருடன் இருந்த இக்கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட மீதம் இருந்தது லிங்க வடிவ எம்பெருமான் மட்டுமே இவரை ஒரு தனி கொட்டகை போட்டு விளக்கு மட்டும் ஏற்றி வழிபாடு செய்கின்றனர், அதில் முக்கியமானவர் பழனிவேல் எனும் அன்பர். உள்ளுர்காரர்கள் சேர்ந்து சிதைந்த கோயிலை படத்தில் உள்ள அளவில் செய்துள்ளனர், அம்பிகை கோயில் இல்லை, பிற சன்னதிகளும் இல்லை, சிலைகளும் இல்லை. இருக்கும் கோயிலை முழுதாய் முடிக்க எவரேனும் வந்து கரம் கோர்த்தால் நல்லது என எண்ணுகிறார். இவ்வூருக்கு முன்கதை ஏதும் உள்ளதாஎன கேட்டபோது அவர் சொன்னது அரிச்சந்திரன் கதை. நேர்மை, உண்மை இவற்றிற்கு பெயர்பெற்ற அரிச்சந்திரன் கதை நடைபெற்ற இடம் இது என கூறுகின்றனர், இதன் சாட்சியாக இவ்வூர் மயானத்தில் அரிச்சந்திரன் சிலை உள்ளதாக கூறுகின்றனர். அரிச்சந்திரன் கதை சுருக்கம்; கதை இறுதியில் அரிச்சந்திரனின் மகன் பாம்பு தீண்டி இறந்தான். உதவி ஏதும் அற்ற அரிச்சந்திரனின் மனைவி தனியாகத் தனது மகனின் பிணத்தையும் தூக்கிக்கொண்டு புலம்பியவளாய் மயானத்துக்குச் சென்றாள். மகனின் பிணத்தை எரிப்பதற்காகச் செலுத்த வேண்டிய வரியைக் கொடுப்பதற்குக் கூட அவளிடம் பணம் இல்லை. சுடலையில் காவல் காப்போனாக இருந்த அரிச்சந்திரனோ அவரது மனைவியோ ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. வரி செலுத்தப் பணம் இல்லையெனக் கூறக்கேட்ட அரிச்சந்திரன் கண்ணில் அவள் கழுத்திலிருந்த தாலி பட்டது. அவளைப் பார்த்து அத்தாலியை விற்று வரி கட்டுமாறு அவன் கூறினான். எனினும் கடமையில் கண்ணாய் இருந்த அரிச்சந்திரன் வரி இல்லாமல் பிணத்தை எரிக்க மறுத்துவிட்டான். அவனது மனைவியிடம் ஒரேயொரு சேலை மட்டுமே இருந்தது. அதில் ஒரு பாதியைக் கிழித்துத் தனது மகனின் உடலைப் போர்த்தியிருந்தாள். மற்றப்பாதியே அவளது உடலை மூடியிருந்தது. அதனை வரியாகக் கொடுத்தால் பிணத்தை எரிக்க முடியும் என அரிச்சந்திரன் ஒப்புக்கொண்டான். அவளும் அதற்கு இணங்கிச் சேலையை அவிழ்க்க முற்பட்டபோது, விஷ்ணுவும், தேவர்களும், விசுவாமித்திர முனிவரும் அவர்கள் முன் தோன்றினர். உண்மை மீது அவன் கொண்டிருந்த உறுதிக்காக அவனைப் போற்றிய அவர்கள் அவனது மகனை உயிர்ப்பித்தனர். இது நடைபெற்ற இடம் இந்த ஊர் சுடுகாடு என்றும் கூறுகின்றனர். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

போத்திராமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பெண்ணாடம்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top