அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், அயனீச்சரம் (பிரமதேசம்)
முகவரி
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், பிரமதேசம் – அஞ்சல் – 627 413, அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: பெரியநாயகி
அறிமுகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் இருந்து 37 கி.மீ. தொலைவிலுள்ள பிரமதேசம் என்னும் தலமே அயனீச்சரம் தலமாகும். அம்பா சமுத்திரம் – முக்கூடல் பாதையில், அம்பாசமுத்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. அம்பா சமுத்திரத்திலிருந்து சென்று வர ஆட்டோ, டாக்சி வசதி உள்ளது. ஊருக்கு அண்மையில் தாமிரபரணி பாய்கிறது. பெரிய சிவாலயம். போதுமான பராமரிப்பு இல்லை. சிவப்புக்கல் கட்டிடம். கோயில் முழுவதும் சிவப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கிறது. கோயிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தக்குளம் உள்ளது. மிகப்பெரிய ராஜகோபுரம். விசாலமான முன் மண்டபத்தில் சில இடங்களில் அழகிய கொடுங்கைகள் உள்ளன. சிறந்த வேலைப்பாடு அமைந்த பழமையான கோயில்.
புராண முக்கியத்துவம்
இறைவன் – கைலாசநாதர், இறைவி – பெரியநாயகி. விசுவநாதர் விசாலாட்சி சன்னதி தனிக்கோயிலாக உள்ளது. நீளமான முன்மண்டபத்தில் அமைந்துள்ள சொக்கநாதர் மீனாட்சி சன்னதியில் உள்ள கல் சிற்பங்கள் அழகான வேலைப்பாடுடையது. உக்கிரத் தோற்றத்துடன் பைரவர் சன்னதி விளங்குகிறது. இங்கு நவகிரக சன்னதி இல்லை. சனி பகவான் மட்டும் உள்ளார். மூலவர் சற்று உயரமான பாணம். ஒரு காலத்தில் வேத விற்பன்னர்கள் நிறைந்த பெருமையுடன் விளங்கிய ஊர் இன்று ஒரு சிற்றூராக காட்சி தருகிறது. கோயில் பெரியது – ஆனால் பராமரிப்பில். விமரிசையாக விழாக்கள் நடைபெறவில்லை. நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் வேத பாடசாலை ஒன்று இவ்வூரில் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு தேவையான படித்தரம் ஸ்ரீ மடத்தில் இருந்து தரப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கோயில் சிறப்பிழந்து தோற்றமளிப்பது கண்டு மனம் கசிகின்றது. (தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் உள்ள ஊருடையப்பர் கோயிலில் உள்ள கல்வெட்டில் தலப்பெயர் ’அஜனீஸ்வரம்’ என்று உள்ளதால் இதை ’அயனீஸ்வரம்’ என்பாருமுளர்).
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அம்பாசமுத்திரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அம்பாசமுத்திரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி