அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், திங்களூர்
முகவரி
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், திங்களூர், திருப்பழனம் – அஞ்சல் – 613 204, திருவையாறு (வழி) தஞ்சை மாவட்டம்.
இறைவன்
இறைவன்: கயிலாசநாதர் இறைவி: பெரியநாயகி
அறிமுகம்
திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்து சாலையில் திருப்பழனத்திற்கு முன்பாகவே, சாலையில் திங்களூர் என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் (இடப்புறமாக) உள்ளே சென்றால் திங்களூரை அடையலாம். அப்பூதியடிகள் அவதரித்த பதி. கோயில் நல்ல நிலையில் உள்ளது. சுற்றிலும் வயல்வெளியில் நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் காட்சி அளிக்கின்றனர். இக்கோயிலுக்கு சொந்தமான உற்சவ மூர்த்தங்கள் பாதுகாப்பு கருதி திருக்கண்டியூரில் வைக்கப்பட்டுள்ளன. சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து கோயிலின் முன்புள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி சந்திரனின் சன்னதியில் பரிகாரம் செய்து கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது. 1962இல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதற்கு பிறகு எவ்வித பணியும் நடைபெறவில்லை என்பது கேட்கவே வேதனையாக உள்ளது. கோயிலின் விமானத்தில் ஆங்காங்கு செடிகள் முளைத்துள்ளன. சுவாமி அம்பாள் சன்னதிக்கு பாதுகாப்புக்காக கதவுகள் கூட இல்லை. அப்பூதியடிகள் வாழ்ந்த இல்லம். சுவடில்லை – தரை மட்டமாகி விட்டது. கோயிலின் பக்கத்தில் உள்ள திடலில் தான் அவரும் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். அவர்கள் தொண்டு செய்த பெரும் தண்ணீர்பந்தல் மெயின் ரோடில் உள்ள முனியாண்டி கோயிலில் கீழ்ப்புறம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது சிறு மண்டபம் உள்ளது. இத்தலம் அப்பர், சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
காலம்
1000 – 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திங்களூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி