அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில், இரணியூர்
முகவரி
அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில், இரணியூர்- 623 212. சிவகங்கை மாவட்டம்
இறைவன்
இறைவன்: ஆட்கொண்டநாதர் இறைவி: சிவபுரந்தேவி
அறிமுகம்
ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும் மயில் வாகனங்களில் அமர்ந்திருப்பது காணக்கிடைக்காத காட்சி. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.
புராண முக்கியத்துவம்
திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்ஹாரம் செய்தார். இதனால்அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், அவருக்கு காட்சி தந்துதோஷம் நீக்கினார். திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் “ஆட்கொண்டநாதர்’ என்ற பெயரில்எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, “நரசிம்மேஸ்வரர்’என்றும் பெயருண்டு.
சிறப்பு அம்சங்கள்
இறைவன் ஆட்கொண்டநாதர் சுயம்பூமர்த்தியாக அருள்பாலிக்கிறார். முருக பகவான் தனது துணைவியார் வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் ஒரு மயில் வாகனத்தில் தோன்றுவது சிறப்பு.
திருவிழாக்கள்
கார்த்திகையில் சம்பகசஷ்டி, திருவாதிரை, சிவராத்திரி, திருக்கார்த்திகை.
காலம்
2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
நகரத்தார்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இரணியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை