Friday Nov 22, 2024

உழவாரப்பணி என்றால் என்ன?

நமசிவாய 

உழவாரப்பணி என்றால் என்ன?

*இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை.

 உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர்* *திருநாவுக்கரசர்.

பழங்காலத்தில் கோயிலில் கிடைத்த நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர்.

இதற்காக சில கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன* 

நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் இருப்பிடத்தை உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் நலமுடன் வாழ்வர்

*கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி.

இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு ’உழவாரப் படை’ என்று பெயர். 

இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர்*

*எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை தூய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி. 

சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்*

உழவார பணி என்றால் என்ன?

சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்

அவையாவன:

1. என்வீட்டு துன்பங்கள் நீங்காமல் இருப்பதற்கு பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை குப்பை கூடங்களில் போடுவது

2. பக்தர்கள் இறைவன் அருள் வேண்டாம் என சொல்லி தூண்களில் திருநீறு போடுவதை சுத்தம் செய்வது

3. இறைவனுக்கு சாற்றப்படும் நிர்மாலிய பூக்களை நந்தவனத்தில் போடும் பணி.

4. திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது..

5. சுவாயின் ஆடைகளை துவைப்பது.

6. அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது.

7. நந்தவனத்தை தூய்மைபடுத்துவது.

8. தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தபடுத்துவது

9. கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது.

10. சிவாச்சாரிகளின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது.

11. 63 வர் மற்றும் கல் திருமேனிகளுக்கு மாவு , தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது.

12. திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது.

13. வாரம் ஒரு முறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மெழுகிடுவது.

14. திருக்கோயிலை சுற்றி கோலமிடுவது.

15. கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது.

16. கற்பூர புகையால் படிந்திருக்கும் கரும்புகைகளை துடைப்பது..

போன்ற பணிகளே உழவாரப் பணி ஆகும்.

இப்பணிகளை குறைந்தது மாதம் ஒரு நாள் செய்வோமானால் உடலும் , மனதும் வலிமை பெறும்.

உழவாரம் செய்வீர் இறைவன் அருள் பெறுவீர்.

உழவாரபணி செய்யும் அன்பர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு செல்வதில்லை என்பது அடியார்களின் அனுபவம்.

நமசிவாய வாழ்க…. சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி…

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top