Thursday Dec 26, 2024

ஸ்ரீ சுத்த ரத்தானேஸ்வரர் ஆலயம்

பல கோடி சூரிய சக்தியை உள்ளுக்குள் கொண்ட  அபூர்வ நடராஜர் சிலையை வழிபட போகின்றோம்

இந்த  அபூர்வ நடராஜர் சிலை ஆசிய கண்டத்தில் வேறு எங்கும் இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது!

இந்த சிலை மானிடர்களால் உளி கொண்டு செதுக்கப்பட்டது இல்லை..

சித்தர்களின் ஆன்மீக சக்தியால் ,  நவ லிங்க பூஜை வழிப்பாட்டிற்கு பின் தானாக  உருவாகிய அற்புதத்திலும் அற்புதமான சிலை இது ஆகும்!

10 லட்சம்  கோடி பாறை நம் பூமியில் உருவானால் , அதில் இந்த  நடராஜர் சிலை உருவான

பஞ்சநதான பாறை ஒன்றே ஒன்றுதான் உருவாகும்!

இந்தக் கோவிலில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்தால் , ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.

மாசி மாதம் வளர்பிறையில் இங்கு உள்ள தட்சிணாமூர்த்தியை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜெபம் செய்யும்போது , பல வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன என்று கூறப்படுகிறது!

ஆகவே மாசி மாதம் வளர்பிறை பிரதோஷம் அன்று   இக்கோவில் சென்று , ஒரு கோடி புண்ணியத்தை  ஸ்ரீ அகத்திய சித்தரின் வாக்குப்படி பெறலாம்!

பல நோய்களை குணப்படுத்த கூடிய அதிசய பிரம்ம தீர்த்தம் இக்கோவில் உள்ளது!

இந்த அபூர்வ நடராஜருக்கு சாத்திய வெட்டிவேரை நீரில் ஊறவைத்து பருகி வர சிறுநீரக கோளாறுகளை அடியோடு குணமாகுகிறது!

இங்குள்ள கொடிமரம் அருகில் மேல் விதானத்தில், 27 நட்சத்திரம், 15 திதிகள், 12 ராசிகள், 9 கிரகங்கள் வடிவமைக்க பட்டு உள்ளது! இதன் கீழ் நின்று நாம் வழிபடும் போது நமது ஜாதகமே மீண்டும் ஒரு முறை நற் ஜாதகமாக சிருஷ்டிக்க படுகிறது என்பது காலம் காலமாக உள்ள நம்பிக்கை

இக்கோவில் திருச்சி மாவட்டம், திருச்சி to சென்னை வழியில் உள்ள பாடலூரிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள ஊட்டத்தூரில் உள்ள ஸ்ரீ சுத்த ரத்தானேஸ்வரர் ஆலயம் ஆகும்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top