Saturday Nov 23, 2024

திருமாலின் சுதரிசன சக்கரம்

திருமாலின் சுதரிசன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு

இப்படி ஒரு கேள்வி கேட்டால் நாம் அனைவரும் தலையை சொறிவோம்!! கொஞ்சம் நகைப்புக்குரிய விஷயம் என்று கூட எண்ணுவோம் ஆனால் விஷயம் இருக்கிறது..

பொதுவாக மஹாவிஷ்ணுவை வழிபடும் வைணவர்களை கேட்டால் கூட இந்த கேள்விக்கு பதில் காண முடியாது ஆனால் நம் சைவ நோக்கில் ஆராய்ந்தால் இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமான பதில் அளிக்க முடியும் ஏன் திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரத்தின் சுழல் வேகம் 30கிமீ/வினாடி என்று துல்லயமாக கூறவும் முடியும்

திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரப் படை சிவபெருமான் அளித்தது என்பது நாடறிந்த உண்மை, திருவீழி மிழலையும் திருமாற்பேறும் ஆகிய இரண்டு ஊர்கள் இந்த வரலாற்றை நினைவு கூறும் அற்புதத் தலங்கள்

சிவபரம்பொருளை ஆயிரம் மலர்கொண்டு அர்சித்த நாராயண மூர்த்தி ஒருநாள் மலரொன்று குறையவே கண்ணொன்றை இடந்து இறைவன் திருவடியில் சமர்பிக்க இறைவன் தான் கையில் வைத்திருந்த சக்கரப்படையை நாராயணற்கு வழங்கினான் என்பது வரலாறு.

திருமாலுக்கு இறைவன் வழங்கிய சக்கரம் இறைவனிடம் எப்படி வந்தது என்று ஆராயப் போனால் அதற்கு நாம் சலந்தராசுர வதம் என்ற அட்டவீரட்டத்தில் ஒரு வீரச்செய்தியை நினைவு கூறவேண்டும்

சலந்தரன் இறைவனின் கோபத்தில் இருந்து தோன்றிய அசுரன், இறைவனை தவிர யாராலும் அவனை அழிக்க முடியாத வல்லமை பெற்ற அவன், சகல உலகங்களையும் வெற்றி கொண்டு திருக்கயிலாயம் நோக்கி இறைவனிடம் போரிட வந்தான்

இறைவன் ஓர் முதியவர் வடிவில் ஆங்கோர் இடத்தில் அமர்ந்து, யாரப்பா நீ என்றார்

நான் சலந்தரன் கயிலாயத்தை வெல்ல வந்தேன் என்றான் அவன்.

கயிலாயத்தை வெல்ல உனக்கு வலிமை போதாது 

கிழவரே என்னை பற்றி உமக்கு தெரியாது சரி தெரிந்து கொள்கிறேன் உன் வலிமையை சோதித்து பார்ப்போம் நான் தரையில் ஒரு சக்கரம் வரைவேன் அதனை நீ பெயர்த்து தலைக்கு மேல் தூக்கினால் வலிமையானவன் என்று ஒப்புகொள்கிறேன் என்ற இறைவன்

தன் கால்விரலால் தரையில் ஒரு சக்கரம் வரைந்தார்

 கேவலம் மண்ணை பேர்த்து தலையில் வைப்பது ஒரு சோதனையா என்ற சலந்தரன் குனிந்து சக்கர வடிவத்தை நகத்தால் கீறி அடியில் விரல்களை நுழைத்து தூக்க முயற்சித்தான்..

சக்கரம் தரையில் இருந்து விடுபட்ட உடனேயே அதி வேகமாக சுழல துவங்கியது!!

நிற்க

சக்கரம் எப்படி சுழல துவங்கியது என்று அறிய ஆவலென்றால் உங்களுக்குள் தூங்கும் இயற்பியல் விஞ்ஞானியை தட்டி எழுப்புங்கள்

இயக்கத்தில் உள்ள பொருளில் இருந்து பிரியும் பொருளும் மூலப் பொருளின் இயக்கத்திலேயே இயங்கும் என்பது இயற்பியல் விதி

அதாவது நாம் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கினால் சிறிது தூரம் ஓடுகிறோமே!! ஏன் என்றால் நாமும் அது வரை பேருந்தின் வேகத்துடன் இணைந்து பயணிக்கிறோம் என்று பொருள்

அது போல புவியின் ஒரு பகுதியாக அதுவரை இருந்த மண்சக்கரம் சலந்தரனால் புவியில் இருந்து விடுபட்ட உடன் புவியின் வேகத்தில் சுழல துவங்கி விட்டது

புவியானது விநாடிக்கு முப்பது கிமீ வேகத்தில் சுற்றுகிறது அதாவது 30KM/Second

புவியின் வேகத்திலேயே புவியில் இருந்து பிரிந்த அந்த சக்கரமும் சுழலும் என்பது நவீன அறிவியலாலும் மறுக்க இயலா உண்மை!!

சுழலும் அந்த சக்கரத்தை முக்கி முனகி இரு கைகளால் ஏந்தி தலைக்கு மேல் தூக்கிய சலந்தரன் அதனை தாங்க வலிமையின்றி நழுவ விட அது அவனை இருகூறாக பிளந்து கொண்டு உருள அதனை இறைவன் தன் திருக்கரத்தில் தாங்கி கொண்டான்!!

இந்த சக்கரமே திருமால் வேண்டி விரும்பியது, இறைவன் திருமாலுக்கு சக்கரத்தை தாங்கி வீசியெறிய வலிமையும் கொடுத்து சக்கரத்தையும் கொடுத்து 

சக்கரதான மூர்த்தியாக நின்றான்

சிவாயநம

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top